உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் கவர்னர்

தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பல்கலை துணைவேந்தர்களை நியமிப்பதற்காக, தான் அமைத்த தேடுதல் குழுவை கவர்னர் ரவி திரும்ப பெற்றார்.சென்னை, பாரதியார் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு நியமிப்பதில், கவர்னர் மற்றும் தமிழக அரசு இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில், கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில், தேடுதல் குழு திரும்ப பெறப்படுகிறது. பல்கலை மானிய குழு உறுப்பினருடன் தேடுதல் குழுவை தமிழக அரசு அமைக்கும் என நம்புகிறோம். மாணவர் நலன் பாதிக்காத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை தேவை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vaiko
ஜன 09, 2024 22:05

பாவம் அடிக்கப்பட்ட ஆப்பு அப்படி. ஆருத்திரா விவகாரத்தில் அண்ணாமலை உள்ளே போகும் பொது எல்லாம் அடங்கிவிடும்.


ஆரூர் ரங்
ஜன 09, 2024 21:59

UGC உறுப்பினரை சேர்க்காமல் தேடுதல் கமிட்டி அமைத்து துணைவேந்தர் நியமனம் செய்தால் பின்னர் மானியக்குழுவிடம் எவ்வித நிதியும்???? பெறமுடியாது. வீம்புக்கு நியமனம் செய்ய வேண்டாமே. அப்பாவி மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர்.


Indian
ஜன 09, 2024 20:14

ஸெல்ப் எடுக்காத வண்டி அடிக்கடி தள்ள வேண்டி உள்ளது


Deiva Prakash
ஜன 09, 2024 19:55

இந்த மாதிரி ஐடியாக்கள் எதாவது பிஜேபி ஆளும் மாநிலங்களில் வெள்ளோட்டம் விட்டுப்பார்த்து அதன் நன்மை தீமைகளை மற்ற காட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பரிந்துரைக்கலாம். BJP ஆளும் மாநிலங்களில் மட்டும் கவர்னர் சமத்தாக இருந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முழு சுதந்திரத்தோடு செயல்பட விடுவார்.


Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 18:54

யானை தன் தலையில் மண்ணை வாரி கொட்டிக்கொள்வதுபோல் நீதிமன்ற தீர்ப்பு. ஆசிரியர் மாணவன் பெற்றோர் ஒருங்கிணைப்பு நன்றாக அமைந்தால் அரசியல் மானியக்குழு தேவையற்றது.


GMM
ஜன 09, 2024 17:40

பல்கலை மானிய குழு + தமிழக அரசு = தேடுதல் குழு ( மொபைலில் டைப் பண்ணும் போது குழுவுக்கு பதில் வேட்டை என்று வந்தது). தமிழக அரசு என்பது ஆளும் கட்சி. கட்சி கொள்கை முடிவுகள் மாறும். கொள்கை முடிவை தேர்தல் ஆணையம், நீதிமன்றம், தமிழக அரசு பொருளாதார, தேசிய நலம் கருதி, ஒரு எல்லையில் நிறுத்தவில்லை. நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவு. கவர்னர் திரும்ப பெற்று ஆக வேண்டிய நிலை. மாணவர்கள் நலன்?


மேலும் செய்திகள்