உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதையில் ரகளை செய்த கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது

போதையில் ரகளை செய்த கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே குடிபோதையில் ரகளை செய்த கணவரை, சகோதரர்களுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த சிவலூரைச் சேர்ந்தவர் நடராஜன்(51), தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி பொன்னம்மாள்(45). இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். நடராஜன் அடிக்கடி குடிபோதையில் வீட்டில் ரகளை செய்து வந்துள்ளார். இதை பொன்னம்மாள் கண்டித்துள்ளார். இருவரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து பொன்னம்மாளின் அண்ணன் சிவலிங்கம் (60), தம்பி சாமி(43) இங்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல போதையில் வீட்டிற்கு வந்த நடராஜன், பொன்னம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அடித்துள்ளார். ஆத்திரமடைந்த பொன்னம்மாள் தனது சகோதரர்களுடன் சேர்ந்து, தேங்காய் நார் உரிக்கும் கம்பியால் நடராஜனை தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த நடராஜன் பலியானார். பொன்னம்மாளை கைது செய்த குலசேகரன்பட்டணம் போலீசார் தப்பியோடிய அவரது சகோதரர்கள் சிவலிங்கம், சாமியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி