உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவ.,29ல் 11 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு; ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது வானிலை மையம்

நவ.,29ல் 11 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு; ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு நவம்பர் 29ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை: குமரிக்கடல் பகுதியில் உருவான இந்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல்- தெற்கு இலங்கை அருகில் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, இன்றும் (நவ.,25), நாளையும் ((நவ.,26) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி* திருநெல்வேலி* தூத்துக்குடி* ராமநாதபுரம்நாளை மறுநாள், நவ., 27ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவாரூர்* நாகை* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* ராமநாதபுரம்* தூத்துக்குடி

ஆரஞ்சு அலெர்ட்

நவம்பர் 28ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தஞ்சாவூர்* திருவாரூர்* நாகைநவம்பர் 28ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராமநாதபுரம்* சிவகங்கை* புதுக்கோட்டை* அரியலூர்* மயிலாடுதுறை* கடலூர்நவம்பர் 29ம் தேதிபுதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு நவம்பர் 29ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.அதேபோல் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராணிப்பேட்டை* வேலூர்* திருவண்ணாமலை* கள்ளக்குறிச்சி* பெரம்பலூர்* அரியலூர்* திருச்சி* சிவகங்கை * ராமநாதபுரம்நவ., 30ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்* திருவண்ணாமலை* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* ராணிப்பேட்டை* வேலூர்* சென்னைஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை