மேலும் செய்திகள்
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
55 minutes ago
சமரச தீர்விற்கு நாங்கள் தயாராக உள்ளோம்: ராம ரவிகுமார் தரப்பு வாதம்
59 minutes ago | 1
ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு
3 hour(s) ago
சென்னை: ''ஜால்ரா அடித்துதான், ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் , அந்த பதவி தேவையில்லை,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி, 2014ல் ஆட்சிக்கு வந்ததும், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்கு, காந்தி பெயரை வைத்தார். அவர், பல இடங்களில், காந்தி பெருமையை உயர்த்தி பிடித்து வருகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என, வாக்குறுதி அளித்தது; இதை தி.மு.க., நிறைவேற்றவில்லை.இதை கேள்வி கேட்க காங்.,குக்கு வக்கில்லை. அண்ணாமலை என்கிற இந்த நாயின் வாலை நிமிர்த்த முடியாது. இது, அப்படி தான் இருக்கும். ஏனெனில், உண்மையை மட்டும் பேசும் நாய். இது, ஜால்ரா அடிக்கிற நாய் கிடையாது. இன்று ஒரு கட்சியில் சேர்ந்து, சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிற நாய் கிடையாது. அந்த நாய் வால் கொஞ்சம் வளைந்து தான் இருக்கும். மோடிக்கு, மக்களுக்கு நன்றியுள்ள விசுவாசமான நாய் இது.சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்க, நான் அரசு பதவியை ராஜினாமா செய்யவில்லை. உன்னதமான கோட்பாட்டிற்காக வந்திருக்கிறேன். ஜால்ரா அடித்து தான், ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால், அந்த பதவி எனக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
55 minutes ago
59 minutes ago | 1
3 hour(s) ago