| ADDED : நவ 18, 2025 07:07 AM
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தேவையில்லை என்பது தி.மு.க., நோக்கம் அல்ல. எஸ்.ஐ.ஆர்., பணிக்கு போதிய கால அவகாசம் இல்லை என்பதால் தான் எதிர்க்கிறோம். பீஹாரில் நடந்தது போல், தமிழகத்தில் நடக்காது. பீஹார் மாடல் தமிழகத்தில் எடுபடாது. தி.மு.க, கூட்டணி உறுதியானது; வலிமையானது. இதை சுக்கு நுாறாக உடைக்க எந்த சக்தியும் இல்லை. பிரதமர் மோடி காணும் கனவு, தமிழகத்தில் பலிக்காது. தி.மு.க., கூட்டணி, எந்த அளவுக்கு வலிமையானது என்பதை 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நிரூபிப்போம். தி.மு.க.,வை வெல்ல இந்தியாவில் எந்த சக்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என மோடி சொல்வதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் எந்தவொரு கட்சியும் காணாமல் போவதற்கான வாய்ப்பு கிடையாது. தோல்வியடைந்த எல்லா கட்சிகளும், ஒரு காலத்தில் வளரும்; ஏற்கனவே அப்படி வளர்ந்த உதாரணங்களும் உள்ளன. - ரகுபதி தமிழக அமைச்சர், தி.மு.க.,