உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.எல்.ஏ.,விடம் கைகூப்பி மன்னிப்பு கூடுதல் செயலர் கேட்டதால் சலசலப்பு

எம்.எல்.ஏ.,விடம் கைகூப்பி மன்னிப்பு கூடுதல் செயலர் கேட்டதால் சலசலப்பு

பல்லடம்:பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரசு அதிகாரி ஒருவர் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை கல்லுாரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.அமைச்சர் கயல்விழி அரசு கொறடா செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பூர் தெற்கு தி.மு.க. - எம்.எல்.ஏ. செல்வராஜிடம் அவர் எம்.எல்.ஏ. என்று தெரியாமல் அரசு கூடுதல் செயலர் ரவிச்சந்திரன் 'சீட்' மாறி அமருமாறு கூறினார். இதனால் கடுப்பான செல்வராஜ் கடைசியில் உள்ள சீட்டில் அமர்ந்தார்.இதை பார்த்து அரசு கொறடா செழியன் தன் அருகில் வந்து அமருமாறு வற்புறுத்தியும் செல்வராஜ் வர மறுத்து அடம் பிடித்தார். அதன் பிறகே செல்வராஜ் எம்.எல்.ஏ. என்பது தெரிந்த ரவிச்சந்திரன் செல்வராஜிடம் இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்டார்.இதனால் சில நிமிடங்கள் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.விடம் அரசு அதிகாரி ஒருவர் பொது மேடையில் மக்கள் முன்னிலையில் கைகூப்பி மன்னிப்பு கேட்டது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Raa
ஜன 17, 2024 15:53

சமூக நீதி... சுயமரியாதை... மனித நேயம்.... etc etc... இருவருக்குமே பொருந்தும்.


D.Ambujavalli
ஜன 17, 2024 10:04

ஒரு ஐந்து வருஷம் தான் இந்தப் பதவியின் ஆயுள்காலம்.... முப்பத்தைந்து வருஷம் இவரைப்போன்ற எத்தனைபேருக்கு வேலை செய்திருப்பார், செய்ய இருக்கிறார்? சிறு தவறுக்காக இத்தனை அலப்பறையா?


SENTHIL
ஜன 17, 2024 07:37

திராவிட மாடல் ஆட்சியில் எதுவும் நடக்கலாம் .


skanda kumar
ஜன 16, 2024 12:39

சூடு சொரணை இல்லாத டாஸ்மாக் தமிழனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். வெட்கம் இல்லாத அதிகாரி. பதவி மக்கள் போட்ட பிச்சை என்று தெரிந்தும் ஆணவம் காட்டும் எம் எல் ஏ .


vijay
ஜன 15, 2024 15:51

அந்த எம்.எல்.ஏ-க்கு இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்டவுடன் சரி "விடுப்பா மன்னிச்சுட்டேன்" என்று வந்து அமர்ந்துவிட்டிருந்தால் நல்ல அரசியல்வாதி, அட "மனுஷன்" என்று ஏற்றுக்கொள்ளலாம். இந்த பவுசு, பகுமானம் எல்லாம் மக்கள் போட்ட "பிச்சை" என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.


S. Gopalakrishnan
ஜன 13, 2024 16:35

தெரியாமல் செய்த செயலுக்கு - இதை தவறென்று கூற முடியாது - இந்தளவுக்கு அவமானப்படுத்தும் தி.‌மு.‌க. தலைவரின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.‌ இந்த அதிகாரியின் குழந்தைகள் இதைப் பார்க்கும் நிலை வந்தால் எவ்வளவு வருத்தம் அடைவார்கள் !


Mani . V
ஜன 13, 2024 04:22

ரௌடிகளின் ராஜ்யத்தில் உய்யலாலா.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை