உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

சென்னை: கொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த, கடலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவிக்கு, கடந்த வாரம் கொலை மிரட்டல் வந்தது. குழந்தையை கடத்தி கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பொற்கொடி போலீசில் புகார் அளித்தார். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அருண்ராஜ் என்பவரை கைது செய்தனர். தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் ஆக உள்ளார். அவரது பெயரில் பணியாற்றும் சதீஸ் என்ற ஊழியர் பெயரில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.கடலூரில் முதன்மை கல்வி அலுவலருக்கு அருண்ராஜ் ஏற்கனவே கைதாகி உள்ளார். இந்த வழக்கில் சதீஷ் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இதில், அருண் ராஜ்ஜிற்கு எதிராக ச தீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக சதீஷை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அருண்ராஜ் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rsudarsan lic
ஆக 09, 2024 12:47

ஒரு கப்பல் ரெடி பண்ணுங்க 15 நாளுக்கு ஒருமுறை நிக்கோபார் தீவுகளுக்கு அனுப்பி விடுங்க. இல்லேன்னா வண்டலூர் கட்சிசாலைல கூண்டு காலி இருந்தா போட்டு வைங்க


Ramesh Sargam
ஆக 09, 2024 12:29

அந்த தனியார் பள்ளியின் பெயரை கூறி இருக்கலாம். மேலும் அது எந்த அரசியல்வாதிக்கு சொந்தம் என்கிற விபரங்களையும் கூறி இருக்கலாம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ