உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 200 தொகுதிகளில் வெற்றி; இலக்கு நிர்ணயித்தார் ஸ்டாலின்

200 தொகுதிகளில் வெற்றி; இலக்கு நிர்ணயித்தார் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலவர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம். அதை ஓட்டுக்களாக மாற்ற களப்பணி அவசியம். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் தி.மு.க., ஆட்சி தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8for6jrc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மா.செயலாளர்கள் மீது புகார்கள்

திமுகவை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கவனித்து கொண்டு தான் இருப்பேன்.

பதவிப் பறிப்பு

தி.மு.க., கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்கள் மீது பதவிப் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தி.மு.க., அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

V RAMASWAMY
ஆக 17, 2024 09:16

இலக்கு வைத்தாகிவிட்டது, இனி எந்த தொகுதி மக்களுக்கு எவ்வளவு தொகை, பிரியாணி, பாட்டில், இதில் எவ்வளவு ஆட்டை போடமுடியும் என்பதெல்லாம் கணக்கு போட ஆரமிபிக்க வேண்டியது தான் .


Jai
ஆக 16, 2024 21:29

கண்டிப்பாக நடக்கும், அடுத்த முறையும் திமுக ஆட்சியைப் பிடிக்கும். அரசு ஊழியர்கள் அடிமையாக திமுகவுக்கு வாக்களிப்பது ஒரு முக்கிய காரணம். தாங்கள் சிறுபான்மையினரின் அடையாளம் என்று திறமையாக நம்ப வைத்துள்ளார்கள். சிறுபான்மையினரும் அடிமையாக தான் திமுகவிற்கு ஓட்டு போடுகிறார்கள். இன்னும் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு அவர்கள் சின்னத்திற்கு ஓட்டு போடும் அடிமைகள். சற்றும் சிந்திக்காமல் ஓட்டு போடும் வாக்காளர்கள் 40க்கு 40 கொடுத்தது போல் சட்டசபை தேர்தலிலும் கொடுப்பார்கள் அல்லவா.


Bala
ஆக 16, 2024 21:18

திருட்டுத் தெலுங்குத் திராவிடியன்கள் ஆட்சியில் நிதி தெலுங்கர்களும் கண்ணீர் தமிழர்களுக்கு.


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2024 19:44

உங்களுக்கு என்ன முதல்வரே , இன்னமும் எத்துணை ஜாபர், முகம்மது சலீம்கள் இருக்கின்றாரோ , கெட்டுப்போவது தமிழக மாணவர்கள் அல்லவா , மதத்தை வைத்து பிரித்து வோட்டினை பெற்றுவிடலாம் என்று எண்ணி வருங்கால தமிழகத்தை நாறடித்து செல்வீர்கள் மற்றொரு படித்த முதல்வர் வந்து சரி செய்யவேண்டும் , பின்னர் உங்களின் ஊடக மாபியாவை வைத்து மீண்டும் ஆட்சி , எப்போது தான் தமிழகத்திக்கு விடியல் கிடைக்கும் ?


J.V. Iyer
ஆக 16, 2024 19:01

கையூட்டு வாங்கிக்கொண்டு திரும்பவும் இந்த ஹிந்துமத விரோத தீராவிஷ கட்சிக்கு ஓட்டுப்போட செக்குலர் ஹிந்துக்கள் ரெடி. போட்டவுடன் குத்துதே, குடையுதே என்று புலம்பவும் ரெடி.


வைகுண்டேஸ்வரன்
ஆக 16, 2024 18:41

கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது அண்ணாமலை 39 தொகுதிகளிலும் பிஜேபி கூட்டணி ஜெயிக்கும். கோவையில் திமுக டெபாசிட் இழக்கும் என்றாரே, அப்போது இந்த வாசகர்கள் ஏன் இது மாதிரி அநாகரிகமாக எழுதவில்லை?? தேர்தல் களில் ஓர் இலக்கு நிர்ணயித்து போட்டியிடுவது தான் ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை. தலைவனுக்கு அழகு. இதெல்லாம் தெரிந்தால் இவர்கள் ஏன் ஓவா, கோட்டர், என்று புரியாத வார்த்தை களையும் அநாகரிக வசனங்களையும் வாந்தி எடுத்து கிட்டு இருக்கப்போறாங்க?? பாவம்.


வைகுண்டேஸ்வரன்
ஆக 16, 2024 18:36

இங்க பல வாசகர்களும் அநாகரிகமாக, சொந்த தமிழ் நாட்டு வாக்காளர்களை அவமதித்து எழுதுகிறார்கள். அவர்களே அதை ரசித்துக் கொள்கிறார்களோ?? ஒருத்தர் "ஓவா " என்று அடிக்கடி எழுதியிருக்கார். ஓவா ன்னா என்ன? ஒரு சில கருத்துக்கள் தான் கொஞ்சமாவது அறிவுடன் அரசியல் பேசுகின்றன. மற்றவை எல்லாம் வெறுப்பு அரசியல், அநாகரிகம். படிக்கவே கடுப்பாக இருக்கிறது. இவ்வளவு வருடம் பேப்பர் படிச்சுமா அறிவு வரலை??


Kasimani Baskaran
ஆக 16, 2024 20:28

"படிச்சுமா அறிவு வரலை" - திராவிட சமூக தீவிரவாதம் என்பது இதுதான். அதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன். தமிழ் பேசும் தமிழர்களுக்கு தமிழ்நாடு. இதில் திராவிடர்கள் மட்டும் ஏன் முன்னேற வேண்டும்? ஆக திராவிடம் என்பது பிராடுத்தனம். உருட்டுவது மட்டும் அப்படியே உத்தமன் போல இருக்கும். விலை கொடுத்து வாங்கும் ஓட்டுக்களை வைத்து பெருமைப்பட முடியாது.


sundarsvpr
ஆக 16, 2024 18:17

முத்துவேல் கருணாநிதி கட்சியை கட்டுப்பாடுடன் வைத்திருந்ததால் ஸ்டாலினை துணை முதல்வராக கூற முடிந்தது. கருணாநிதியை விட ஸ்டாலின் நிர்வாக திறமையுள்ளவர் ஆனால் .கட்சியில் இவரின் ஆதிக்க திறமை குறைவு. எனவே உதய நிதியை துணை தலைமை அமைச்சர் என்று கூறுவது திரிசங்கு சொர்க்கம்போல் உள்ளது.


Anand
ஆக 16, 2024 17:56

பங்காளி எடப்பாடி இருக்கும்வரை உனது காட்டில் மழைதான்.......


Durai Kuppusami
ஆக 17, 2024 07:47

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை..கட்சியை அழித்துவிட்டுதான் ....... அதிமுக விசுவாசி


M S RAGHUNATHAN
ஆக 16, 2024 17:08

கூட்டணி கட்சிகளையும் சேர்த்தா அல்லது தனியாக நின்று வெல்வதா?ஸ்டாலின் தளபதி. ஆகவே தனியாக கூட்டணி பலம் இன்றி 200 இடங்களில் வெல்வோம் என்கிறாரா ஸ்டாலின். அப்போ காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை ஆகியவைகளுக்கு சங்கா?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ