உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விடைக்குறிப்பு வெளியிடுவதில்லை: ஐகோர்ட் கிளை அதிருப்தி

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விடைக்குறிப்பு வெளியிடுவதில்லை: ஐகோர்ட் கிளை அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடுவதில்லை' என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 90 காலியிடங்களுக்கான இந்த தேர்வை 2.38 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்குமாறு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில், 'டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. விடைக்குறிப்பு வெளியிடவும், மொழிபெயர்ப்பு தவறான 6 வினாக்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க கோரியும், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடுவதில்லை. அதேபோல், நீதித்துறை தேர்வுகளுக்கு வெளியிடுவதில்லை. வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் விளக்கம் பெற்று தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஆக 21, 2024 20:06

நாங்க நாலு காசு பாக்கிறதப் பார்த்து பொறாமைல இப்படியெல்லாம் சொல்றாங்க. எங்களுக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். அது உங்களுக்கும் தெரியும்.


Kasimani Baskaran
ஆக 21, 2024 18:54

தேசிய அளவு தேர்வுகளுக்கு ஓட்டை சொன்னவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்வு முறைகளை விசாரித்தால் வெலவெலத்துப்போவார்கள்.


raja
ஆக 21, 2024 18:07

விடை குறிப்புகளை வெளியில் விட்டால் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பம் கொள்ளை அடிக்க முடியாதே


அப்பாவி
ஆக 21, 2024 16:41

விடையாவது வடையாவது. எங்களுக்கு கேள்வி கேக்க மட்டுதான் தெரியும். கவனிக்க வேண்டியவங்களை கவனிச்சா உங்க விடை சரியா இருக்கும்.


Suppan
ஆக 21, 2024 16:36

கம்பெனி ரகசியங்களை எப்படி வெளியிடுவது ? நாங்க எப்படி கல்லா கட்டுவது ?


KRISHNAN R
ஆக 21, 2024 15:50

அப்படி ரகசியம் லாம்..சொ ல்லு வார்களா


மேலும் செய்திகள்