உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

வாக்காளர் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து, 10 நாட்களுக்கு முன்னர் வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில், வேட்பு மனு தாக்கல் வரும் 20ம் தேதி துவங்கி, 27 ம் தேதி நிறைவடைய உள்ளது. எனவே, லோக்சபா தேர்தலில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், www.voters.eci.gov.inஇணையதளத்திலும், 'Voter Helpline' மொபைல் ஆப்ஸ் வழியே விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''இன்று வரை பெறப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும். அதன்பிறகும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவை தேர்தலுக்கு பின் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raman
மார் 17, 2024 07:05

please advice him not to conduct election as it was at Erode (by Election)


Palanisamy Sekar
மார் 17, 2024 04:24

நம்ம சீமான் அவர்களுக்கு யாரேனும் சற்றே நினைவு கூறுங்கள். அப்புறமா ஓட்டுப்போட போகும்போது வாக்களிக்க தகுதி இல்லை, காரணம் நீங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை பதிந்துகொள்ளாமல் விட்டுவிட்டீர்கள் என்று சொல்ல, அதற்கு இந்த சதிக்கு பின்னால் திரு அண்ணாமலை அவர்கள் இருக்கின்றார் என்று புலம்புதல் கூடாது. நான் உலகறிந்த தலைவர் எனக்கே வாக்களிக்க உரிமை இல்லையா என்றெல்லாம் வசனம் பேசக்கூடாது அல்லவா..அதறகுதான் நினைவூட்ட சொல்கின்றேன்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை