உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை நாடெங்கும் கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்: நடிகர் விஜய் அறிக்கை

நாளை நாடெங்கும் கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்: நடிகர் விஜய் அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாளை (ஆக.,22) 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ள நடிகர் விஜய், 'நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்' என அறிக்கை வெளியிட்டதுடன், நாளை காலை 9:15 மணிக்கு கொடி அறிமுகம் செய்ய உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zme3y2zw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற தன் ரசிகர் மன்றத்தை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக விஜய் மாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு முன்பே கட்சி துவங்கினாலும், 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்தார். தனி கட்சி துவங்கி விட்டதால், இருக்கும் படங்களை முடித்து, முழுநேரமாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த விஜய், கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் செப்., 22-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது. மாநாட்டிற்கு முன்னதாக நாளை (ஆக.,22) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை: சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சிக் கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் மகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு, நாளை காலை 9:15 மணிக்கு கொடி அறிமுகம் செய்ய உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 07:39

இவரின் பின்னால் இருந்து இயக்குவது யார் ?


BHARATH
ஆக 22, 2024 20:32

அதுக்கு குடிக்காம இருக்கணும்.


Annai Stalin
ஆக 22, 2024 14:50

Good


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 22, 2024 12:16

"நாடெங்கும் கொடி பறக்கும் தமிழகம் இனி சிறக்கும்” என்று எடுத்த எடுப்பிலேயே தமிழகத்தை தனி நாடாக அறிவித்து கட்சி துவங்குகிறார். வழக்கம் நமது இந்து தமிழர்கள் வழி வழியாக எப்படி இந்து மதத்தை எதிராக செயல்படுகின்ற வர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வார்களோ அதேபோல் இவருக்கும் வாக்களித்து வெற்றிபெற செய்வார்கள். இங்கு கவனிக்கவும் இதுவும் திமுகவின் உப கட்சியே. எப்படி அதிமுக காலத்தில் கமல்ஹாசனை வைத்து கட்சி துவங்க வைத்து இந்துக்களை குழப்பி வாக்குகளை சிதறடிக்க செய்து திமுக வெற்றி பெற்று பின்னர் திமுகவோடு மக்கள் நீதி மையத்தை இணைத்து கொண்டதோ அதேபோல் இந்த விஜய் கட்சியையும் தோற்றுவித்து மக்களை மாக்களாக்கி குழப்பி பின்னர் திமுகவோடு ஐக்கியம் ஆக்கி கொள்வார்கள். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த போதே நான் பல முறை இதே தினமலர் பகுதியில் கமல்ஹாசன் கட்சி திமுகவின் பி டீம் என கூறியிருந்தேன்.


Durai Kuppusami
ஆக 22, 2024 07:22

இதெல்லாம் பக்கா ஏமாத்து வேலை இவனெல்லாம் வரலேன்னு யாரு கேட்டா.. நெற்றியில் குங்குமம் வைத்து தமிழ் மக்களை ஏன் இந்துக்களையும் ஏமாத்தறான்.இவனெல்லாம் தலைவர் கால் தூசுக்கு சமம் இல்லை.....


Annai Stalin
ஆக 22, 2024 14:50

எந்த தலைவர் ப்பா


சண்முகம்
ஆக 22, 2024 06:09

விஜய் ஜோசப் நெற்றியில் குங்குமம். தமிழன் நிச்சயம் ஆதரிப்பான்.


S. Neelakanta Pillai
ஆக 22, 2024 05:29

மக்களை சுரண்டி கொழுத்தவன் அரசியலுக்கு வருகிறான். ஒரு படத்திற்கு ரூபாய் 300 கோடி சம்பளம் வாங்கும் இவனிடம் என்ன நேர்மை இருக்கும். ரூபாய் 300 கோடி சம்பளம் வாங்க அப்படி என்ன செய்து கிழித்தான். அறிவிழந்த மக்கள் அதிலும் இளைஞர்கள் சினிமா என்கிற போதையில் அவர்களை மூளை சலவை செய்து அரசியலில் கொள்ளை அடிக்க வருகிறான். ஒருவன் மது போதையில் மக்களை சுரண்டுகிறான். இவன் சினிமா போதையில் மக்காஜை சுரண்ட வருகிறான். போட்ட எச்சில் காசுக்கு ஜனநாயகத்தின் நான்காவது தூண் கூஜா தூக்குது....வெட்கக்கேடு.


Rajalakshmi Tex
ஆக 22, 2024 07:16

என்னத்த கிழித்து தொங்க விட்டா. 40/40 இந்த முட்டா தமிழன் எதுக்கு ஓட்டு போட்டான்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 21, 2024 22:13

திமுகவின் பி டீம் அதிமுக ..... சி டீம் மநீம .... டி டீம் நாம் தமிழர் .... ஈ டீம் தவெக .....


TSRSethu
ஆக 21, 2024 21:51

இழுத்து பாரப்போம். வந்தால் மலை. இழக்க ஏதும் இல்லை.


சமூக நல விரும்பி
ஆக 21, 2024 21:48

கொடி பறக்கும் உண்மை நாடு எப்படி சிறக்கும். ஆரம்பமே பண உதவி செய்தது ஓகே. ஆனால் மக்கள் உங்கள் பணத்தை நம்பி காத்து நிற்கும் நிலை வர கூடாது. மாணவர்கள் 12 வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு ஒரு தொழில் அமைத்து கொடுத்தால் அது உண்மையான விடியலுக்கு வழி வகுக்கும். சாராயம் குடிப்பவர்களுக்கு எந்த சலுகையும் தரக்கூடாது.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ