உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஜி.,க்கள் இரண்டு பேர் இடமாற்றம்

ஐ.ஜி.,க்கள் இரண்டு பேர் இடமாற்றம்

சென்னை:போலீஸ் ஐ.ஜி.,க்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக காவல் துறையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய, வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக ஐ.பி.எஸ்., அதிகாரி கண்ணன் பணிபுரிந்தார். இவர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய, தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு ஐ.ஜி.,யாக பணிபுரியும் நரேந்திரன் நாயர், வடக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலை ஒட்டி, இரண்டு ஐ.ஜி.,க்களும் மாற்றப்பட்டு இருப்பதாக, கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை