| ADDED : மார் 01, 2024 04:41 AM
மதுரை: ''லோக்சபா தேர்தலில் தனித்தொகுதி நீங்கலாக அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிட வேண்டும். அதற்காக ஜெ., பேரவை சார்பில் விருப்ப மனு அளிக்கப்படும்,'' என, எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.இதற்காக நேற்று அவர் நிர்வாகிகளுடன் சென்னை புறப்பட்டார். முன்னதாக மதுரையில் அவர் கூறியதாவது:அனைத்து தொகுதிகளிலும் பொதுச்செயலர் போட்டியிட வேண்டும் என, ஜெ., பேரவை தொண்டர்கள் விரும்புகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியை யாரும் குறை கூற முடியாது. அதற்கு தான் பிரதமர் சான்று அளித்துள்ளார். அந்த சான்று இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ள பழனிசாமிக்கும் சேரும். மக்களை காக்கும் பணியில் அவர் உள்ளார். பார்லிமென்டில் பெரியாறு, காவிரி பிரச்னை குறித்து, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவர். இவ்வாறு கூறினார்.