மேலும் செய்திகள்
திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்: இபிஎஸ்
6 hour(s) ago | 7
சென்னை:பாமணி விரைவு ரயில், பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.திருப்பதி-மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரயிலானது, கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கையை, மத்திய இணையமைச்சர் எல். முருகன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் முன்வைத்திருந்தார்.இந்த ரயில் நிறுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சகம், பண்ருட்டி ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில் நின்று செல்லும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வழங்கியுள்ளது.தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு, மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.
6 hour(s) ago | 7