மேலும் செய்திகள்
நில அளவை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு
4 minutes ago
சென்னை: 'தமிழக கடலோர பகுதிகளில் வாழும் மீனவர்களுக்கு பட்டா வழங்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுதும், 14 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இங்கு, 10.47 லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான மீனவர்கள், கடற்கரையை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் பாரம்பரியமாக வசித்து, மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். குடியிருக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது, மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை. தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளை கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி, சில மீனவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகங்களில் மனு அளிப்பதும், துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைப்பதும் தொடர் கதையாக உள்ளது. எனவே, தங்களுக்கு விரைவாக பட்டா வழங்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, 'பாரத மக்கள் கழகம்' நிறுவன தலைவர் பிரபாகரன் கூறியதாவது: பூர்வீக குடிகளான மீனவர்களுக்கு, தமிழக அரசு இதுவரை முழுமையாக பட்டா வழங்கவில்லை. தமிழகத்தில், 14 கடலோர மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், கண் துடைப்புக்காக, ஒரு சில மீனவ குப்பங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் பட்டா வழங்கி விட்டு, மீனவர்கள் அனைவரும் பயன் அடைந்ததாக ஆட்சியாளர்கள் கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள பூர்வீக குடிகளான மீனவர்கள் அனைவருக்கும், தமிழக அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
4 minutes ago