உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர் கைது பின்னணியில் பொன்முடி: அண்ணாமலை "பகீர்" குற்றச்சாட்டு

துணைவேந்தர் கைது பின்னணியில் பொன்முடி: அண்ணாமலை "பகீர்" குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: ‛‛சேலம் பெரியார் பல்கலை., துணைவேந்தர் மீது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தூண்டுதலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.சேலத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி வருகையால் தமிழக பா.ஜ., வினர் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியது தமிழக மக்களுடன் பிரதமர் மோடி இணைந்துள்ளதை காட்டுகிறது. 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்து மாநிலங்களுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gggh64co&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தலைகுனியக்கூடிய அளவில் சேலம் பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜெகநாதன் கைது சம்பவம் நடந்துள்ளது. துணைவேந்தரின் கைதில் போலீசார் செயல்பாடு சரியில்லை. ஜாதி கூறிய திட்டியதாக முகாந்திரமே இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து கொண்டு 4 மணி நேரம் போலீசார் வாகனத்தில் சுற்றியது ஏன்?. துணைவேந்தர் ஜெகநாதன் கைது ,பொன்முடி சொல்லி கொடுத்து தான் நடந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலை., 5 ஆண்டுகளாக பதிவாளர் இல்லாமல் இயங்கி வந்தது.தற்போது துணைவேந்தர் மீது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தூண்டுதலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

K.Ramakrishnan
ஜன 03, 2024 23:08

ஒரு அக்யூஸ்டுக்கு அண்ணாமலை துணை போகலாமா? இதுல ஏதோ இடிக்குதே....


M Ramachandran
ஜன 03, 2024 17:00

பாவம் உபிஸ்ஸ் பொன்முடி கம்பி என்ன போவதால் புத்தி தடுமாற்றம் ஏதோ ஏதோ உளறுகிறார்கள்ளை


hari
ஜன 03, 2024 16:11

செந்தமிழ் வந்துட்டார்ல.....


N.Purushothaman
ஜன 03, 2024 15:31

ஓசிக்கு சொம்படிக்க சில பல கொத்தடிமைகள் இங்க வந்து இருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை ....


NicoleThomson
ஜன 03, 2024 15:28

சர்வாதிகாரிகள் கூத்தில் என்னவெல்லாம் நடக்கும் ?


GMM
ஜன 03, 2024 14:37

தமிழக போலீசார் மத்திய அரசின் உள்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். தமிழக வழக்கறிஞர்கள் மத்திய சட்ட அமைச்சகம் கீழ் இருக்க வேண்டும். மக்கள் புகார் பெற்று தவறான வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலமை மோசம். பொன்முடி/ பித்தளைமுடி யாராக இருந்தாலும் தமிழக திராவிட இயக்க கட்டுப்பாட்டில் தொடர்ந்து வழக்கறிஞர்கள், போலீசார் செயல்பட்டு வருகின்றனர். சாதாரண அரசு ஊழியரை அரசியல்வாதிகள் போல் கைது செய்ய முடியாது.? பல்கலை துணை வேந்தரை கைது செய்ய துணியும் பொலிஸார் எந்த சட்ட விதியையும் பின்பற்ற மாட்டார்கள். சமாதிக்கு அந்தி சாமத்தில் நீதிமன்றம் திறந்து தீர்ப்பு. இது போன்ற சர்வாதிகார மாநிலம் தேவையில்லை. மத்திய அரசு தனி மசோதா தாக்கல் செய்து, முறைப்படுத்த முடியும்.


திகழ்ஓவியன்
ஜன 03, 2024 13:51

எல்லோரையும் சொல்லுவான் இவன் நேர்மை என்றால் நிரூபித்து வாருங்கள் என்று அதே தான் இதற்கும்


கல்யாணராமன் சு.
ஜன 03, 2024 22:01

அதாவது எல்லோரையும் ஒருமையில் வசை பாடறது போன்ற திராவிட மாடல் கண்ணியம் கனடாக்கு போனாலும் கூடவே இருக்கும் போலிருக்கு


செந்தமிழ் கார்த்திக்
ஜன 03, 2024 13:50

மேலும் அடிப்படை ஆதாரங்கள் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், நீதி மன்றத்தில் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். மீறினால் கடுமையான தண்டனை கொடுக்க பட வேண்டும்.


செந்தமிழ் கார்த்திக்
ஜன 03, 2024 13:48

பொன்முடி மீது ஆதாரம் இல்லாமல், முகாந்திரம் இல்லாமல், குற்றம் சுமத்தும் அண்ணாமலை மீது நீதி மன்றத்தில் பொன்முடி வழக்கு தொடுக்கலாம். அது கட்டாயம் பலருக்கு பாடமாக அமையும்.


sridhar
ஜன 03, 2024 17:17

செய்யட்டும், அதற்கும் சேர்த்து இன்னும் மூணு வருஷம் கிடைக்கும் , பரவாயில்லையா .


vadivelu
ஜன 03, 2024 20:23

அப்படி வழக்கு தொடுக்கா விடில் அண்ணாமலை சொல்வது உண்மை என்றாகும் ஓகேவா.


C.SRIRAM
ஜன 03, 2024 21:27

பொது சொத்தை கொள்ளை அடிக்கும் போது ...வயது விஷயம் நினைவில்லயா ?. சாதாரண ஒரு மனிதனுக்கு இதே சலுகையை நீதி மன்றம் கொடுக்குமா ?. இது தமிழ் நாடா அல்லது தமிழ் காடா ? . சட்டம் ஆளுக்கேற்றபடி மாறிக்கொள்கிறது


கனோஜ் ஆங்ரே
ஜன 03, 2024 13:34

////பிரதமர் மோடி வருகையால் தமிழக பா.ஜ., வினர் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது....//// இதனால், தமிழ்நாடு அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக வல்லரசாகிடுச்சு.. வல்லரசாகிடுச்சு...?


hari
ஜன 03, 2024 16:12

எப்படியெல்லாம் கம்பி கட் ராறு பாருங்க.........


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி