உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கைவயலை தொடர்ந்து விக்கிரவாண்டியிலும் ‛‛வக்கிரம்: கிணற்று நீரில் மலம் கலந்து அட்டூழியம்?

வேங்கைவயலை தொடர்ந்து விக்கிரவாண்டியிலும் ‛‛வக்கிரம்: கிணற்று நீரில் மலம் கலந்து அட்டூழியம்?

விழுப்புரம்: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித மலக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் அதிர்வுக்குள்ளான நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திறந்தவெளி குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. நேரில் ஆய்வு செய்த தாசில்தார் யுவராஜ், ''இது மனிதக்கழிவு அல்ல, தேனடை'' எனத் தெரிவித்தார்.சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த சம்பவம் முடிவதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையம் அடுத்த கஞ்சனூர் கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் திறந்தவெளி கிணற்றில் மர்ம நபர்கள் மனித மலக்கழிவுகளை கலந்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அக்கிணற்று தண்ணீரை பயன்படுத்த அஞ்சுகின்றனர். இது குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தாசில்தார் மறுப்பு

இது தொடர்பாக தாசில்தார் யுவராஜ், கிணற்றில் நேரடியாக ஆய்வு செய்தார். அதில், கிணற்று தண்ணீரில் இருந்தது மனிதக் கழிவு அல்ல, தேனடை என்பது தெரியவந்ததாக யுவராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

DARMHAR/ D.M.Reddy
மே 17, 2024 06:55

விக்கிரவாண்டி வக்கிரவாண்டி ஆகிவிட்டதோ ?


subramanian
மே 16, 2024 17:09

உண்மை மறைக்கப்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது காவல் துறை செயல்பட விரும்பவில்லையா அதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது


RAMAKRISHNAN NATESAN
மே 15, 2024 22:57

தேனடையை டிஸ்யூ பேப்பராக பயன்படுத்தியவனின் வேலை இது அதுதான் என்று தாசில்தார் சொன்னால் சர்வாதிகாரி கோபித்துக்கொள்வார்


kulandai kannan
மே 15, 2024 18:53

இனி தேன் அருந்தும்போது ஏதாவது ஞாபகம் வந்தால் அந்த தாசில்தார்தான் பொறுப்பு.


கனோஜ் ஆங்ரே
மே 15, 2024 17:42

தேனடையினை தண்ணீரில் போட்டால் அது மிதக்கும் இருபது அடி கிணற்றில் மிதக்கும் தேனடையை பார்த்தால், மனிதக் கழிவு மாதிரி தெரியும்? உண்மை என்னென்னே தெரிவில்லை


தமிழ்வேள்
மே 15, 2024 16:45

-தேனடை -என்று சொல்ல சொல்லி மேலிடத்திலிருந்து தாசில்தாருக்கு உத்தரவு திராவிடம் என்பதே பெரும் சமூக அநீதி


Prabakaran VK
மே 15, 2024 16:33

அந்த கிணற்றில் இருந்தது வெறும் தேனடை தான் என்று ஊடகத்தில் சொல்லிவிட்டார்கள் தீர்த்தது பிரச்சனை


Siva
மே 15, 2024 16:16

நீர் இன்று உலகம் வாழாது நீரில் மாசுபடுத்தும் குற்றம் அரசு சரியான முறையில் நடத்த வேண்டும்


R KUMAR
மே 15, 2024 15:37

புகை படத்தை பார்த்தால் தேனடை போன்றே தோன்றுகிறது ஆனால் அத்துடன் மனித கழிவை கலந்து கிணற்றில் வீசியிருந்தால், கண்டுபிடிக்க முடியாது எனவே கிணற்று நீரை சோதனை செய்தால் மட்டுமே உண்மையை கண்டுபிடிக்க இயலும்


Natarajan Ramanathan
மே 15, 2024 13:50

இந்த ஊருக்கு வக்கிரம் பிடித்த ... வந்தானா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை