உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: திமுக கூட்டணி எதிர்ப்பு: அதிமுக வரவேற்பு

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: திமுக கூட்டணி எதிர்ப்பு: அதிமுக வரவேற்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்பணிக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.பீஹாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நவ., 4முதல் டிச., 4 வரை வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட உள்ளன. 2026 பிப்.,7 ல் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

கம்யூ., எதிர்ப்பு

இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்துக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஒரு மாதத்தில் விண்ணப்பம் கொடுப்பது என்பது சாத்தியம் கிடையாது. எனவே இந்தப்பணியை நிறுத்த வேண்டும் எனக்கூறி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கூட்டணி கட்சிகளின் சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல. நவ.,2 ம் தேதி அனைத்து கட்சிகளையும் அழைத்து அவர்களின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் வாக்கு உரிமையை பாதுகாக்க வேண்டும் என எண்ணம் கொண்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். நவ.,2க்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணியை எதிர்த்து தமிழகம் போர்க்களமாக மாறும் சூழ்நிலை நடக்கும். இதனை தமிழகத்தில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக வரவேற்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது. இதனை வெளிப்படையாக செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். தங்களுக்கான தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ramani
அக் 28, 2025 06:21

இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதாலே சந்தேகம் வருகிறது. வாக்காளர் பட்டியலில் நீங்கள் ஏதோ கோல்மால் பண்ணியிருக்கிறீர்ளோ அதனால் தான் எதிர்ப்போ என்று


Rajan A
அக் 27, 2025 22:05

எதற்கு பதட்டம்? தைரியமாக செய்ய சொல்ல வேண்டியதுதானே.


SP
அக் 27, 2025 21:29

இவர் எதிர்ப்பதிலிருந்தே இது நல்ல விஷயம் ஆகும். மேலும் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதும் காலமானவர்களைப் பெயரை நீக்குவதும் கூடாது என்கின்றாரா? இது எந்தவிதமான அரசியல் என்பது புரியவில்லை


முருகன்
அக் 27, 2025 21:11

எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுக வை அ.. வைத்து 9 வருடங்கள் ஆகிறது இதில் எங்கே எதிர்ப்பது


K.Ravi Chandran, Pudukkottai
அக் 27, 2025 20:53

ஒருவர் எதிர்ப்பு, ஒருவர் ஆதரவு . தேர்தல் கமிஷனக்கு என்று தனி ஊழியர்கள் இல்லை. தங்களது பல்வேறு பணிகளுக்கு இடையே தமிழ்நாடு வருவாய் துறையின் கடைநிலை ஊழியர்கள்தான் இதையும் செயல் படுத்தி ஆக வேண்டும். அடுத்து வரும் நாட்கள் வருவாய் துறையினருக்கு போதாத காலம்தான்.


Rajkumar Ramamoorthy
அக் 27, 2025 20:36

நல்லது எதுவும் வர விட மாட்டானுக


ஆரூர் ரங்
அக் 27, 2025 19:57

ஸ்டாலினுக்கு தைரியமிருந்தால் இதில் தமிழக அரசு ஊழியர்களைப் பயன்படுத்த விட மாட்டேன் என்று கூறட்டும் பார்க்கலாம்.


M.Sam
அக் 27, 2025 19:37

ஏன் வரவேற்கிறாய் அப்பிடின்னு விஷயம் ஏதோ இருக்கு பீகார் ஸ்டோரி எங்க பண்ண பாக்கிறீங்க போல தமிழ் ண்டு மக்கள் ஒன்னும் வடக்கன் மாதிரி இல்லை


Sundar R
அக் 27, 2025 19:36

எதைப் பற்றியாவது பேசணும் என்றால், அதைப்பற்றி பேசுவதற்கு ஒரு யோக்கியதை வேணும்.


Narayanan Muthu
அக் 27, 2025 19:27

தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் சிறைவாசத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள களவாணி வரவேற்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழக நலனை அடகு வைத்து தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள நினைத்தவர் தானே.


SUBBU,MADURAI
அக் 28, 2025 02:42

ஏலே அறிவாலய அடிமையே, திமுகவிற்கு முட்டுக் கொடுத்தே உன் ஆயுசு முடியப் போகுது அதற்கு முன் உன் வாரிசுகளை இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்ட தயார் படுத்தி வைத்து விட்டு போய் சேர்....


N Sasikumar Yadhav
அக் 28, 2025 02:59

கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகளின் பதறல்தான் மிக அதிகமாக இருக்கிறது . உண்மையான இந்தியர்கள் இந்த சிறப்பு சீர்திருத்தத்தை வரவேற்பார்கள் வாக்குவங்கி அரசியல் செய்பவர்கள் மிகமிக கேவலமான ஜென்மங்கள்


ramani
அக் 28, 2025 06:22

அப்படியானால் கோல்மால் பண்ணியிருக்கிறீர்ளோ அதனால் தான் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்


முக்கிய வீடியோ