உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுப்போட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் வசதி

ஓட்டுப்போட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் வசதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாளை( ஏப்.,19) ஓட்டுப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஓட்டுப்போட இலவச பஸ் பயணம் செய்ய மதுரை கோட்டத்தின் தமிழக அரசு பஸ் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஓட்டுப்பதிவு நாளன்று (ஏப்.,19) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட ஏதுவாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பஸ்களில் இலவசப் பஸ் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவச பஸ் பயணம் மேற்கொள்ளலாம் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஏப் 18, 2024 20:20

வோட்டு போட்ட பிறகு, மீண்டும் அவர்களை அவர்கள் ஏரிய இடத்திலேயே கொண்டுவிடுவீர்களா? இல்லை வோட்டு சாவடியிலேயே அம்போ என்று விட்டுவிடுவீர்களா?


அப்புசாமி
ஏப் 18, 2024 19:22

ஓசீல எதுக்கு பஸ் வசதி?


Hari Bojan
ஏப் 18, 2024 16:40

பெண்களுக்கு கொடுத்ததுபோல் ஆண்களுக்கும் இலவச பஸ் வசதி எல்லா நாட்களிலும் கோடுத்துவிடலாமே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை