| ADDED : நவ 23, 2025 01:05 AM
சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், 'இரண்டு அதிகார மையங்கள் கிடையாது; சட்டசபை மற்றும் அமைச்சரவை என்ன முடிவு எடுத்து அறிவிக்கிறதோ, அதற்கு கவர்னர் ஒப்புதல் தர வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, கவர்னர் ரவிக்கு, சரியான சம்மட்டி அடி. இந்த உண்மை செய்தியை வெளிக்கொண்டு வந்தால், மத்திய அரசு மற்றும் மத்திய அரசுக்கு துணை போகும் கவர்னர்களுக்கு பலவீனம் என்பதால், தெளிவான விளக்கத்தை, யாரும் வெளியிடாமல் மறைக்கின்றனர். ஒரு வேளை, சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு பிறகு, குழம்பிய நிலையில் இருக்கிறேன் என பித்தலாட்ட செயலை கவர்னர் செய்தால், தீர்ப்பை கவர்னருக்கு தெளிவு படுத்துவோம். துணைவேந்தர் நியமனம், பல்கலை துவங்குவது என அமைச்சரவை கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஒப்புதல் தர வேண்டிய கடமை மட்டுமே கவர்னருக்கு உண்டு. நீண்ட நாட்களாக மசோதாவை வைத்திருப்பது கவர்னர் வேலை அல்ல எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது - கோவி.செழியன், உயர்கல்வி அமைச்சர், தி.மு.க.,