உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஸீல் கோழி வளர்ப்புக்கு வரவேற்பு: கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரை

அஸீல் கோழி வளர்ப்புக்கு வரவேற்பு: கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரை

சென்னை: 'அஸீல்' இன கோழி வளப்பு திட்டத்திற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு கால்நடை பராமரிப்பு பரிந்துரை செய்துள்ளது. கிராமங்களில் உள்ளோரை, நாட்டுக்கோழி வளர்ப்பில், தொழில் முனைவோராக மாற்ற, 50 சதவீத மானியத்தில், 'அஸீல்' இன நாட்டு கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஆறு கோடி ரூபாய் மதிப்பில், தமிழகம் முழுதும், 360 பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், நான்கு வார வயதுடைய, தலா, 250 அஸீல் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்திற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோழி பெற, 600 பேர் கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர். எனவே, அவர்களுக்கும் திட்டம் சென்றடையும் வகையில், தேவையான அளவு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, கால்நடைத்துறை பரிந்துரை செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.2,500க்கு விற்பனை

அஸீல் கோழி இனம், சேவல் சண்டைக்காக வளர்க்கப்பட்டது. இவை வலிமை மிகுந்தவை; சுறுசுறுப்பானவை. மற்ற கோழிகளை விட, அதிக எடை வளரக்கூடியது. சேவல் 4 முதல் 5 கிலோ; கோழி, 3 முதல் 4 கிலோ எடை கொண்டதாக வளரும். ஆண்டுக்கு, 60 முதல் 70 முட்டைகள் வரை இடும். இதன் முட்டை மற்றும் இறைச்சி சுவை மிக்கதாகவும், அதிக சத்து நிறைந்ததாகவும் உள்ளது. நன்கு வளர்ந்த ஒரு கோழி, 2,000 முதல் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை