வணிக வளாகத்தில் வெடித்தது என்ன; உடுமலையில் அதிர்ச்சி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாகத்தில் பயங்கர வெடி சத்தத்துடன் தீப்பற்றி எரிந்து வருகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே யு.கே.பி., வணிக வளாகம் அமைந்துள்ளது. கடைகள், அலுவலகங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.இங்கு இன்று(நவ.,24) இரவு பயங்கர வெடி சத்தத்துடன் தீ பிடித்து எரியத் தொடங்கியது.அருகில் யாரும் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் எப்படி இந்த சம்பவம் நேரிட்டது, வணிக வளாகத்தில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்ற விபரம் தெரியவில்லை.சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பிட்ட இந்த வணிக வளாகம் பாஜ பிரமுகருக்கு சொந்தமானது. இந்த வணிக வளாகம், 1990ம் ஆண்டுகளில் ஒரு முறை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.