உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு, தமிழக மக்களுக்காகச் செய்தது என்ன? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி, இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு.ஆட்சி அமைந்தது முதல்,மகளிருக்கான பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம்,காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு,புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய்,மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய்- எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு, தமிழக மக்களுக்காகச் செய்தது என்ன? மத்திய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

N SASIKUMAR YADHAV
ஜன 06, 2024 10:04

நாகூசாமல் எப்படி இப்படி வெட்கப்படாமல் மத்தியரசை கேள்வி கேட்க தோனுது திமுக ஒட்டிய ஸ்டிக்கரெல்லாம்...துண்டுச்சீட்டை பார்த்து வாசிப்பவர்கள் ஒருமுறை ஒத்திகை செய்துவிட்டாவது....


Krishna Moorthy
ஜன 06, 2024 10:03

முதலில் நீங்கள் மக்களுக்கு செய்தது என்ன? 4000 கோடி எப்படி, எங்கே செலவானது? எந்த நிதியிலிருந்து இலவசங்கள் கொடுக்கப்பட்டது? இதற்காகவாவது வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மக்களே மத்திய அரசிடம் பேசி வாங்கி கொடுக்க முடியும். நீங்கள் அத்தனை பேரும் உத்தமரா என்ன வெள்ளை அறிக்கை விட


karunamoorthi Karuna
ஜன 06, 2024 08:49

தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஏதும் செய்ய வில்லை.திருட்டு திமுக வின் திராவிட மாடல் அரசு டாஸ்மாக் சாராயம் விற்பனை மூலம் நெம்பர் ஒன்று மாநிலம் ஆக உயர்த்தி உள்ளது மகனும் மருமகனும் 30000 கோடி திருடி வைத்து இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் கூறி உள்ளார் 11 அமைச்சர்கள் திருடியதாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இது தான் திராவிட மாடல்


Varadarajan Nagarajan
ஜன 06, 2024 08:25

வாக்களித்த மக்களுக்கு இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என முதலில் சொல்லவேண்டும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, புதிய வாகன பதிவு வரி உயர்வு, சொத்து பதிவு வரி உயர்வு என சொல்ல பல ஐட்டங்கள் உள்ளதே. அதன் பிறகு தங்கள் கூற்றுப்படி ஒன்றிய அரசை கேட்பது இருக்கட்டும். ஒன்றிய அரசு செய்த பல நல்ல திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. மேலே ஒட்டியுள்ள ஸ்டிக்கரை எடுத்துவிட்டு பார்த்தால் அதயும் தாண்டி மத்திய அரசு செய்த திட்டங்கள் தெரியும். அதான் ஸ்டிக்கர் மறைகின்றதே


AMSA
ஜன 06, 2024 08:09

இந்த ஆளுக்கு ஆட்சி நடத்தவும் தெரியல , பதில் சொல்லவும் தெரியல ,, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் விரிவாக விளக்கமாக சொல்லியிருக்காங்க .. தென்னரசு விளக்கத்தில் பூசி முழுகி இருக்காங்க


Matt P
ஜன 06, 2024 07:13

குடியை கெடுக்கும் குடியை மூடிபுடுவோம்னு சொல்லிட்டு பல மனைவிகளை பல பிள்ளைகளை தவிக்கவிட்டு கணவர்கள் பரலோகம் காரணாமான நீர் என்ன செஞ்சு இருந்தாலும் வீண் தான். நன்றாக படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிய வேண்டிய மாணவர்களின் படிப்புக்கு தடை போடும் மனிதர்களை எந்த நாட்டிலும் பார்க்க முடியாது திராவித மாடல் நாடு தவிர்த்து. தண்டனைக்குள்ளான அமைச்சரை சிறைச்சாலையில் இருந்தாலும் அவருக்கு அமைச்சர் அந்தஸ்து கொடுக்கும் முதல் அமைச்சரும் தண்டனைக்குள்ளானவர்


Mani . V
ஜன 06, 2024 06:58

நீங்கள் தமிழக மக்களுக்கு என்ன செய்தீர்கள் சர்வாதிகாரி சாப்? (இப்ப ஒன்றிய அரசு என்று சொல்வதில்லையா? அவ்வளவு பயம்)


Ramesh Sargam
ஜன 06, 2024 06:22

மத்திய அரசு மாநிலத்துக்கு கொடுத்த திட்டங்களில் திருட்டுத்தனமாக திமுக ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிவிட்டு, இப்பொழுது தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? என்று கேள்வி கேட்கிறாயே, நீ நல்லா இருப்பியா? ஏன் இந்த கேள்வியை அன்று பிரதமர் திருச்சி வந்தபோது நேரில் அவரிடம் கேட்கவேண்டியதுதானே... தைரியம் இல்லையா..?


meenakshisundaram
ஜன 06, 2024 05:12

திசை திருப்பும் காலை திமுகவின் உடன் பிறந்தது .அந்தந்த மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு பாடு பட வேண்டியது முதல்வர்களின் கடைமை .அவர்கள் மக்களை சுரண்டல் இருந்தாலே பொது.ஆனால் அரசியலில் இருந்து கொண்டு நாட்டை சுரநடுவதை ஒரு கலையாகவே மாற்றிவிட்டது.அதை ஒரு முழு நர தொழிலாக மாற்றிய பெருமை திமுகவுக்கே உண்டு,இதில் மக்களை திசை திருப்பும் விதமாக இப்படி சொல்கிறார்கள்.


நரேந்திர பாரதி
ஜன 06, 2024 05:08

எவ்வளவு முறை விளக்கமாக எடுத்து சொன்னாலும்,- காதில் ஊதிய சங்குதானோ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை