உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்மை கிலோ என்ன விலை? பிரதமர் கேட்பாராம் - முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

உண்மை கிலோ என்ன விலை? பிரதமர் கேட்பாராம் - முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

சென்னை: பிரதமர் மோடி பேசுவதைக் கவனித்தால், உண்மை கிலோ என்ன விலை? என்று அவர் கேட்பார் போல என தெரிவதாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.,வின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது. இண்டியா கூட்டணி வெல்லும். மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். உத்தர பிரதேச மக்களை தென் மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாக கற்பனை கதைகளை மோடி பேசுகிறார். அவர் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படும் மக்கள் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்த துணிந்துள்ளார்.

நாளொரு பரப்புரை

பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தரும் விடியல் பயணத் திட்டத்தை பிரதமர் மோடி எதிர்க்கத் துணிந்துள்ளார். தற்போது அவர் பஸ்களில் இலவச பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை என கூறுகிறார். மெட்ரோ 2ம் கட்டத்திற்கு நிதி தராமல் முடக்கிய பிரதமர் விடியல் பயணத்திட்டத்தின் மீது பழி போடுகிறார். அவர் நாளொரு பரப்புரை, பொழுதொரு வெறுப்பு விதை என பேசி வருகிறார். பிரதமர் மோடி பேசுவதைக் கவனித்தால், உண்மை கிலோ என்ன விலை என்று கேட்பார் என தோன்றுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், '' நீண்ட ஆரோக்கியத்துடன் நிறைவான வாழ்வை பெற ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துகள்'' எனக் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 69 )

sethu
மே 21, 2024 18:14

உண்மையே பேசி வாழ்ந்த அரிச்சந்திர மகாராஜாவின் வாரிசு பேசுகிறார்


A1Suresh
மே 21, 2024 10:34

எம்ஜியாருக்கு அடுத்து ...


Ravichandran K
மே 21, 2024 06:58

பெண்கள் விடியல் பேருந்தில் பயணம் செய்வதால் மெட்ரோ ரயிலில் குறைகிறது என்பது இத்திட்டத்தின் வெற்றி என்று தானே அர்த்தம் இதற்கு ஏன் இவர் பொங்குகிறார்


Ranganathan
மே 20, 2024 08:24

Stalin himself is a big lier Stalin is known for hate speech There is a big TV Channel to assist him for his team of corrupt friends and parties Hope this public cheating can not continue for a long time


Subramanian N
மே 19, 2024 18:57

உண்மை என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத குடும்பத்தை சேர்ந்தவர் இவர் யார் எதை பேசுவது என்பதற்கு அர்த்தமே இல்லை


M Ramachandran
மே 19, 2024 17:08

நாட்டையும் மக்களையும் பாழ் படுத்தும் கும்பல் பேசுவதை பொருள் படுத்த வேண்டாம்


M Ramachandran
மே 19, 2024 17:06

தேச விரோத சக்திகளின் கூட்டம் INDI கூட்டணி


M Ramachandran
மே 19, 2024 17:03

அது உங்களிடம் உள்ள கேள்வி


M Ramachandran
மே 19, 2024 17:02

மடியில் அதிகா கணம் வைத்திருக்கும் ஸ்டாலின் அதிகம் பேசினால் பின் விளைவுகள் மோசமாக போகும்


V RAMASWAMY
மே 19, 2024 11:14

சாதிகளைப் பிரித்து சமூகத்தை பிளவு படுத்தி, மொழி வெறியையும் உண்டாக்கி, நாட்டை பிரிவினை செய்யக்கூடிய தேச விரோதிகள் சொல்லும் கருத்தும் மக்களை சென்றடையாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை