உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுகள் சரிந்தது ஏன்?

ஓட்டுகள் சரிந்தது ஏன்?

சென்னை : தமிழகத்தின் ஓட்டுப்பதிவு சதவீதம், கடந்த தேர்தலை விட இம்முறை சரிந்தது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள சூழலில், கொளுத்தும் வெயிலே காரணம் என சூரியனை கைகாட்டுகிறது தேர்தல் ஆணையம். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 71.90 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இம்முறை 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற கோஷத்துடன் தேர்தல் கமிஷன் ஏராளமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தது.

பிரசாரம் பலன் இல்லை

ஊடகங்களில் அனைத்து மொழிகளிலும் இடைவிடாத பிரசாரம் செய்யப்பட்டது. சாவடிகளிலும் பயணம் செய்யவும் வாக்காளர்களுக்கு நிறைய வசதிகள், சலுகைகள் செய்யப்பட்டன. அவ்வளவு செய்தும், 69.94 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன. தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, ராமநாதபுரம், ஆகிய ஐந்து தொகுதிகளில் மட்டுமே, 2019 தேர்தலை விட, இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தலில் இரு முனை போட்டி நிலவியது. இப்போது மும்முனை போட்டி என்பதால் ஓட்டுப்பதிவு நிச்சயம் அதிகரிக்கும் என ஆணையமும், கட்சிகளும் எதிர்பார்த்தன. ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குறைந்த சதவீதமே பதிவாகியுள்ளது. கொளுத்தும் வெயிலே முக்கிய காரணம் என்கிறது தேர்தல் ஆணையம். 'காலையில் விறுவிறுப்பாக துவங்கிய ஓட்டுப் பதிவு, உச்சி வெயில் நேரத்தில் வழக்கம் போல குறைந்தது. அனல் காற்று ஓய்ந்த பின் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். ஏனோ அப்படி நடக்கவில்லை' என அதிகாரிகள் கூறுகின்றனர். அநேக சாவடிகளில் ஏராளமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதும் இன்னொரு முக்கிய காரணமா என்ற கேள்விக்கு நேரடியாக அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. 'விரைவில் தவறுகள் சரி செய்யப்படும்' என்று மட்டும் கூறினர்.

கள ஆய்வு

நமது நிருபர்கள் குழு நடத்திய கள ஆய்வில், ஓட்டு சதவீதம் சரிய கீழ்க்காணும் காரணங்கள் தெரியவந்தன: ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி அறிவிக்கும்போதும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரிபார்க்க வேண்டும். இம்முறை அவ்வாறு செய்யவில்லை; உயரதிகாரிகள் கண்காணிக்கவும் இல்லைவாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அடிக்கடி வீடு மாறினாலும், முகவரி ஆவணங்களை மாற்றுவது சிரமம் என்பதால் அப்படியே விட்டு விடுவது வழக்கம். தேர்தலன்று பழைய முகவரிக்கு சென்று ஓட்டு போட்டுக் கொள்ளலாம் என நினைப்பர். அப்படிப்பட்ட பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.சிலர் புது முகவரி காட்டியதால் ஓட்டு போடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்பலர் இரு முகவரியிலும் பெயர் இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வாக்காளர் எண்ணிக்கை இருப்பதை விட அதிகமாக தெரியவும் இது ஒரு காரணம்.தொழில்நுட்பம் வாயிலாக இறந்தவர்கள் பெயர்களை சேகரித்து, பட்டியலில் இருந்து நீக்கி இருக்கின்றனர். ஆனால், அதை பதிவிட்ட முறையில் பிழைகள் காரணமாக தந்தை பெயர் மகனுக்கும், மகன் பெயர் தந்தைக்குமாக மாறியிருக்கிறது. அவர்களும் ஓட்டு போட முடியாமல் போனது இரண்டு இடத்தில் ஓட்டு இருந்தால், எந்த இடத்தில் உங்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என கேட்டு, அவர் விரும்பாத இடத்தில் நீக்கப்படும் என ஆணையம் கூறியது. ஆனால், வாக்காளரின் விருப்பம் என்ன என்று கேட்காமலே பல பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன ஒரு ஓட்டுச்சாவடியில் 1,000 ஓட்டுகள் இருப்பதாக, வாக்காளர் பட்டியல் காட்டியது. கட்சிக்காரார்கள் வீடு வீடாக சென்றபோது, 600 வாக்காளர்களே இருந்தனர். இதனால், ஒரே ஒரு சாவடியில் 400 ஓட்டு அதிகமாக காட்டியது பட்டியல். அவர்கள் இடம் பெயர்ந்தனரா, சொந்த ஊருக்கே திரும்பினரா என்று அறிய ஆணையம் ஆர்வம் காட்டவில்லை உதாரணமாக கோவை வடக்கு தொகுதியில், பூத் எண்: 230 ரங்கநாதர் வீதியில், 368 வாக்காளர்கள் இருப்பதாக பட்டியல் காட்டுகிறது. வீடு வீடாக சென்று பார்த்தபோது, வெறும் 73 வாக்காளர்களே வசிப்பது தெரிந்தது. 68 பேர் இரு கி.மீ., சுற்றளவுக்குள் வீடு மாறியுள்ளனர். 33 பேர் இறந்து விட்டனர். நான்கு பெயர்கள் இரட்டை பதிவு. 190 பேர் எங்கே என்றே தெரியவில்லை.இது பற்றி தேர்தல் பிரிவில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வீடு வீடாக சோதிக்க ஆளில்லை என கூறுகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை சேர்ந்து கிடைப்பதால், தேர்தல் கடமை பற்றி கவலைப்படாமல் நிறைய பேர் ஊருக்கு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Kuppan
ஏப் 21, 2024 23:29

ஓட்டுகள் குறைந்ததற்கு உதய "சூரியன்" தானு "கை" காட்டுதா சரிதானே


எஸ் எஸ்
ஏப் 21, 2024 20:48

முன்கூட்டியே டிசம்பர் மாதம் தேர்தலை நடத்தி இருக்கலாம். வெயிலில் இருந்து தப்பி இருக்கலாம்


M Ramachandran
ஏப் 21, 2024 20:00

எப்படி இந்த தமிழ்நாட்டு தேர்தல் ஆணயம் ஒரு சார்புடையதாகா ஆட்சியாளார்களுக்கு மார ஆர்மபித்ததோ அப்போதெ நடு நிலமை பிறழ்ந்து செயல் படுகிறது


GMM
ஏப் 21, 2024 18:31

சூரியனை கோள்கள் சுற்றவது போல் மாநில போலீஸ், நிர்வாகம் சுற்றியது பின் நீதிமன்றம் தன்னை இணைத்து கொண்டது? தற்போது மாநில தேர்தல் ஆணையம் இணைத்து விட்டது? திமுக அல்லாத பிற ஓட்டுகள் சரிய உதய் சூரியன் காரணம் மாநிலத்தில் பிஜேபி வளர்ச்சி திராவிடர்கள் பயம் அறிய உதவும் தற்போதைய அனுபவம் சட்ட பேரவைக்கு உதவும் பிஜேபி டிஜிட்டல் முறையில் தனியாரிடம் விடுபடுவதை கண்டறிய ஆவன செய்ய வேண்டும்


பாரதி
ஏப் 21, 2024 15:45

தேர்தல் நடத்தித் தருவதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் மிகவும் சிறப்பாக தேர்தல் நடக்கலாம். அரசுக்கு ஆவதை விட தனியார் நிறுவனம் குறைவாகவே செலவை எடுத்துக் கொள்ளும் . அதிகமான பலனை தரும் சிந்திப்பது நல்லது .


Kalaiselvan Periasamy
ஏப் 21, 2024 15:21

இது போன்ற தவறுகள் வரும் நாட்களில் நடக்காமல் இருக்க மக்களும்....! தங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை தேர்தல் ஆணைய பக்கத்தில் சரி பார்த்து கொள்ள வேண்டும்.....! அந்த வசதியை தேர்தல் ஆணையம் கொண்டுள்ளது தானே....!


S Murthy
ஏப் 21, 2024 14:20

Those who are not voted should be levied a fine


Nagarajan1
ஏப் 21, 2024 12:58

ஏபிசி என்னும் என்ற வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்ட பின்பும் முகவரி மாற்றதின்போது பழைய முகவரியும் புதிய முகவரியும் சேர்ந்து காணப்பட்டது இது வாக்காளர்களின் தவறு இல்லையே தேர்தல் ஆணையம் மாற்றங்களை உடனடியாகவும் சரியாகவும் தங்கள் பதிவுகளில் மேற்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது


தமிழ்வேள்
ஏப் 21, 2024 12:47

வெள்ளிக்கிழமை & திங்கட்கிழமை தேர்தல் வைத்தால் எல்லா ஹாலிடே வருவதால் தேர்தல் புதன்கிழமை அன்று நடத்தவேண்டும் ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை ரோடு இணைக்கப்பட வேண்டும் ஆதார் அட்டை விலாசம் உள்ள தொகுதியே வாக்காளர் தொகுதி ஆகும் மேலும் பயோ மெட்ரிக் மற்றும் ஓடிபி பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று இருந்தால் ஆளும்கட்சி ஆதரவு அரசு ஊழியர் செல்வாக்கான ஆகிவிடுவார்கள் வாக்காளர் லஞ்சம் வெகுவாக குறையும் ஆதார் -பான் இணைத்தது போல ஆதார் - ஓட்டர் ஐடி இணைக்க வேண்டும்டிவி அல்லது வானொலி மூலம் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும் ஆன்லைன் வாக்குபதிவு முறை கொண்டு வந்தால் தேர்தல் விடுமுறை தேவையில்லை முக்கியமாக தேர்தல் நாள் அன்று எந்த ஒரு டிவி யிலும் திரைப்படம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் ஒருநாள் சினிமா பார்க்காமல் இருந்தால்


Senthil
ஏப் 21, 2024 12:08

சரியான கருத்து ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக இணைக்க பட வேண்டும் மேலும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்து, election ஒரு மாதம் முன்பாக, ஒவ்வொருவரும் அவர்களுக்கு வாக்களிக்க முடியுமா என்ற தகவல், website வெப்சைட் ல் பார்த்து தெரிந்து கொள்ள ஒரு option கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் வோட்டு அளிக்க முடியுமா என்று முன்பே தெரியும், யாரும் ஏமாற்ற முடியாது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ