உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்?: சத்யபிரதா சாஹூ புது விளக்கம்

ஓட்டுப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்?: சத்யபிரதா சாஹூ புது விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தில் 3 முறை மாற்றம் செய்யப்பட்டது. இந்த குளறுபடிக்கு, 'ஓட்டுப்பதிவு சதவீதத்தை ஒருசிலரே செயலியில் பதிவிட்டதே காரணம்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கமளித்தார்.தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், முதலில் 72 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் 69.46 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dz8y6ui4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குழப்பம் அடங்குவதற்குள் நேற்று (ஏப்.,21) மதியம், 69.72 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக 3வது முறையாக மாற்றி அறிவித்தனர். தேர்தல் ஓட்டுப்பதிவில் இவ்வளவு குளறுபடிக்கு நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.அவர் கூறியதாவது: ஓட்டுப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. செயலியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஓட்டுப்பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் சிலர் மட்டுமே அப்டேட் செய்தனர். தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தகவல் வர தாமதமாகும் என்பதால் செயலி மூலம் கிடைத்த தகவல்களை ஊடகங்களுக்கு அப்டேட் செய்தோம். இவ்வாறு சத்ய பிரதா சாஹூ விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Sridhar
ஏப் 25, 2024 16:30

அப்படியே சில அதிகாரிகள் செயலியில் பதிவேற்றம் செய்யவில்லை என்றால், அதனாலே சரி செய்தபிறகு வோட்டு சதவிகிதம் அதிகரிக்கத்தான் வேண்டும், எப்படி குறைந்தது? விளக்கம் மேற்கொண்டு நம் ஆர்வத்தை தூண்டுகிறது


ச. ராமச்சந்திரன்
ஏப் 24, 2024 11:13

சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம்என்றால் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டதிற்க்கும் செயலியே காரணமோ?


ச. ராமச்சந்திரன்
ஏப் 24, 2024 11:08

சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம் என்றால் வாக்காளர் பட்டியல் விடுபட்டதிற்க்கும் செயலியே காரணமாக இருக்குமோ?


K.n. Dhasarathan
ஏப் 24, 2024 10:41

சத்திய பிரத சாஹு வை வேறு பணிக்கு மாற்றுங்கள் இந்த பணிக்கு இவர் சற்றும் பொருத்தமில்லாதவர், ஆர் கே நகர் தொகுதியில் இவர் திறமையை கண்டு மக்களில் வியக்காதவர்களே இல்லை, அதிலும் ஒரு தேர்தல் நடத்தியதும் தலைமை தேர்தல் அதிகாரியானது எப்படி? தேர்தல் ஆணையமா? தேராத ஆணையமா? மக்கள் நம்பிக்கையை பெற இயலவில்லை எதோ மேலதிகாரிகளின் ஆதரவு, இனியாவது நல்ல திறமையான அதிகாரியை போடுங்கள்


தத்வமசி
ஏப் 23, 2024 22:52

இவர் மத்திய அரசால் அனுப்பபட்டவராக இருந்தாலும், இவருக்கு கீழே அனைத்து மாவட்டங்களிலும் வேலை செய்வது யார் ? தமிழக அதிகாரிகள் இப்படித்தான் குளறுபடிகளை செய்வார்கள் ஆளும்கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டாமா ? அப்பத்தானே கல்லா கட்டமுடியும், பதவி உயர்வு பெற முடியும் நாடு நாசமா போகட்டும் நீங்கள் கல்லா கட்டு அதிகாரிகளே பாவமாவது புண்ணியமாவது உங்கள் சந்ததிகள் தானே அந்த பாவத்தை அனுபவிக்கப் போகிறது.


திண்டுக்கல் சரவணன்
ஏப் 23, 2024 13:50

நரேஷ் குப்தா போன்ற நேர்மையான - கடுமையான நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் இருந்த இடத்தில், இப்போது உள்ள அதிகாரி மிக மிக சுமார் தலைமை தேர்தல் ஆணையம் இவரை கண்டிப்பாக மாற்ற வேண்டும்


Venkataraman
ஏப் 23, 2024 09:34

இந்த தேர்தல் அதிகாரியை முதலில் பதவியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் இவர் மேல் எல்லா கட்சிகாரர்களும் ஏராளமான புகார்களை கொடுத்திருக்கிறார்கள் ஆனால் இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எந்த தவறும் நடக்கவில்லை, எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் நடந்த குளறுபடிகளிலும் இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் இதுபற்றி வழக்கு நடந்து வருகிறது


Dharmavaan
ஏப் 23, 2024 07:25

இவன் திமுக கைக்கூலி என்பது உண்மை அது ஈரோடு தேர்தலில் நிரூபணம் இவனை மாற்றியிருக்க வேண்டும்


Azar Mufeen
ஏப் 22, 2024 22:49

இத்தன வருசமா மோடிகிட்ட பெருந்தொகை வாங்கினார் இப்போ ஸ்டாலின் கிட்ட வாங்குறார்


Sriniv
ஏப் 22, 2024 21:06

The whole things seems very weak and unconvincing No one is prepared to believe Satyaprata Sahu One day one figure The next day another figure Are people fools not to realize that there has been a huge manipulation ? Thats clearly what has happened


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை