உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சியில் போதி தர்மருக்கு நினைவு மண்டபம் கட்டப்படுமா?

காஞ்சியில் போதி தர்மருக்கு நினைவு மண்டபம் கட்டப்படுமா?

சென்னை:''காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்,'' என, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - எழிலரசன்: காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் சிம்மவர்மனின் மூன்றாவது மகனான போதி தர்மர், பவுத்த மடாலயத்தில், சிறந்த தத்துவ ஞானியாக விளங்கினார். கீழ் திசை நாடுகளில் பவுத்தம் பரப்ப சென்றார். அவர் சீனா சென்றபோது ஏற்படுத்திய மாற்றங்கள், உருவாக்கிய ஷாலின் மடாலயம், 16 நுாற்றாண்டுகளாக இயங்கி வருகிறது.இன்றைக்கு மதவாதம் மனிதநோயாக மாறி வரும் சூழலில், மனிதனின் ஆன்மத்தை வளர்க்கும் தத்துவ சிந்தனையை வளர்த்தவர். காஞ்சிக்கு உலகம் சார்ந்த பவுத்த அறிஞர்கள் வருகின்றனர். எனவே, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.அமைச்சர் சாமிநாதன்: மணிமண்டபம், நினைவு மண்டபம் அமைப்பதற்கு பதிலாக, அரங்கம் அமைத்து, விழாக்கள் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், உறுப்பினர் கோரிக்கை நிதி நிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்.எழிலரசன்: காமராஜர் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியதற்கு உறுதுணையாக இருந்தவர், காஞ்சிபுரம் அடுத்த நெய்யாடுவாக்கத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேல். அவர் நுாற்றாண்டு விழா நடக்கிறது. அவரது ஊரில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும்.அமைச்சர் சாமிநாதன்: நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - சுந்தர்: பாலாற்றங்கரையில் அண்ணாதுரை சிலை அமைத்து, திறந்தவெளி அரங்கம் அமைக்க வேண்டும். நெய்யாடுவாக்கம் மேல்நிலைப் பள்ளியில், சுந்தரவடிவேலுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் திறந்து வைக்க வேண்டும்.அமைச்சர் சாமிநாதன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை