வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அம்பேத்கர் மத மாற்றத்தை எதிர்த்தார்? இப்போ சொல்லுவீங்களா?? யாரவது இந்த நா ..வ சங்கியை காமெடி பீசுன்னு ??? ஆமா அம்பேத்கரே வேற மதம் மாறிட்டாராமே? அப்படியா??
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த சாலையூர் கிராமத்தில், ஹிந்து பறையர் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடந்தது.இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:தன் வாழ்நாள் முழுதும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக போராடியவர் அம்பேத்கர்.கடந்த 1952ம் ஆண்டு மும்பையில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின், ஜனசங்கம் போன்ற அமைப்புகளின் உதவியால் மீண்டும் வெற்றி பெற்றார். அம்பேத்கர், ஜாதி ஏற்றத்தாழ்வு இல்லாமல், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்தவர்.ஹிந்து மதத்தில் இருந்து வேறு மதம் மாறினால், பட்டியல் சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் வாய்ப்புகள் பறிபோகும்.பட்டியல் சமூக மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு உண்டு. மதம் மாறினால் இடஒதுக்கீடு கிடையாது.அம்பேத்கர் மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்தார். சில அமைப்புகள் பட்டியல் சமூக மக்களை தவறாக வழி நடத்துகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.
அம்பேத்கர் மத மாற்றத்தை எதிர்த்தார்? இப்போ சொல்லுவீங்களா?? யாரவது இந்த நா ..வ சங்கியை காமெடி பீசுன்னு ??? ஆமா அம்பேத்கரே வேற மதம் மாறிட்டாராமே? அப்படியா??