உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவ.21ம் தேதி முதல் நவ.23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார். மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது. தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார். இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை.தென் ஆப்ரிக்காவுக்கான அமெரிக்க தூதர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்பார். தென் ஆப்ரிக்காவின் அதிபர் என்ன பொய்களை கூறினாலும், அதிகாரபூர்வ கூட்டங்களில் அமெரிக்கா பங்கேற்காது. இவ்வாறு கரோலின் லீவிட் தெரிவித்தார். ஏற்கனவே, ''தென் ஆப்ரிக்காவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜி 20 உச்சி மாநாட்டில் எந்த அமெரிக்க அதிகாரியும் பங்கேற்க மாட்டார்கள்'' என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை