உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 14 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்

14 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: விண்வெளியில் 14 கோடி மைல் தூரத்திற்கு அப்பால் இருந்து லேசர் சிக்னல் பூமிக்கு வந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.சுமார் 14 கோடி தொலைவில் விண்வெளியில் இருந்து பூமியில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்திற்கு லேசர் சிக்னல் வந்தடைந்துள்ளது.நாசா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சைக்கி 16 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இது செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் உள்ளது. சைக் விண்கலம் ‛டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேசன்' தகவல் தொடர்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், லேசர் தொடர்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த லேசர் தொடர்பு தற்போதுள்ள ரேடியோ அலைகளை விட வேகமாக செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.சைக்கி விண்கலத்தின் லேசர் தகவல்தொடர்புகள் சுமார் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து தரவுகளை அனுப்பியது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம். இதனை எட்டு நிமிடங்களில் பதிவிறக்கம் செய்ததாக, இதன் திட்ட இயக்குநர் மீரா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Indian-இந்தியன்
மே 04, 2024 12:33

இந்த தரவு கோடி மைல்கள் தொலைவிலிருந்து புறப்பெட்டது என்று எப்படி கணித்தார்கள் ??


Ciril
மே 02, 2024 22:39

USA la mattum than parakum thattu adikadi parakum ipo laser signal vera NASA arumai


Krishna
மே 12, 2024 22:44

நான் லில் திருநெல்வேலியில் பறக்கும் தட்டு கிழக்கிலிருந்து மேற்குநோக்கி செல்வதை பார்த்து கண்டு களித்தோம் அது பவுர்ணமி நிலா போன்று வட்டமான தட்டு போன்று இருந்தது


Lion Drsekar
மே 02, 2024 18:50

கல் , மண் தோன்றுவதற்குமுன் நம் முன்னோர்கள் எந்த ஒரு ரூபாய் எழவும் இல்லாமல் அமர்ந்தஇடத்தில இருந்தே கூறிய எந்த ஒரு செய்தியுயுமே ஜாதி, மதத்தை வைத்துக்கொண்டு , இவர்களை எதிரிபபதற்காகவே ஒரு அமைப்பு மற்றும் கட்சியை வைத்துக்கொண்டு பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் ,,,, இதே கருத்துக்களை மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் கோடி செலவு செய்து கூறினால் ?? விதி, வந்தே மாதரம்


Jagan (Proud Sangi)
மே 02, 2024 18:29

"திட்ட இயக்குநர் மீரா ஸ்ரீநிவாசன் " - நாயர் டீ இருக்கட்டும் நாம அவா இவா என்று ஓரம் காட்டினால் , எங்கே போயும் கலக்குகிறார்கள் நட்டம் அவாளுக்கு இல்லை


J.V. Iyer
மே 02, 2024 16:57

டீ ரெடின்னு நாயர் சிக்னல் அனுப்பி இருப்பார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை