மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
15 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
15 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
19 hour(s) ago
வாஷிங்டன் : அல் - குவைதாவின், செல்வாக்கு மிகுந்த இரண்டாம் நிலைத் தலைவர் அடியா அப்துல் ரகுமான்,40. இவர், பாகிஸ்தான் எல்லையில், அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் பலியானதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. ரகுமானின் மறைவு, அல் - குவைதாவுக்கு, பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 22ம் தேதி, பாக்., எல்லையில் நடந்த, ஆளில்லா விமானம் ஒன்றின் குண்டு வீச்சில், ரகுமான் பலியானதாகத் தெரிவித்தனர்.
லிபியாவின் மிஸ்ரட்டா நகரைச் சேர்ந்த ரகுமான், ஒசாமா பின்லாடனின் மறைவுக்குப் பின், அல் - குவைதாவின் செல்வாக்கு மிகுந்த இரண்டாம் நிலைத் தலைவராகவும், அல் - குவைதாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல் ஜவாஹிரியின் வலது கரமாகவும் செயல்பட்டவர். லிபியா விவகாரத்தில், இவரது பங்கும் இருக்கலாம் என, அமெரிக்கா சந்தேகித்து வந்த நிலையில், இவரது மரணம், அந்நாட்டிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
15 hour(s) ago
15 hour(s) ago
19 hour(s) ago