UPDATED : ஜூலை 14, 2024 11:33 AM | ADDED : ஜூலை 14, 2024 08:48 AM
வாஷிங்டன்: டிரம்ப் -க்கு எதிராக பிரசாரம் வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், அவரிடம் போனில் பைடன் ஆறுதல் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன், டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருவருக்கொருவர் ஒரே மேடையில் காரசாரமாக விவாதித்து கொண்டனர். இந்நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=64bis3cm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த அதிபர் பைடன் , டிரம்ப் உடல் நலம் குறித்து போனில் விசாரித்தார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த துயரமான நேரத்தில் டிரம்புக்கு எதிராக யாரும் பிரசாரம் செய்ய வேண்டாம் என்றும் , அவருக்கு எதிரான நடவடிக்கை அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறும் ஆதரவாளரகளை கேட்டு கொண்டுள்ளளார். பிரதமர் மோடி கண்டனம்
டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கண்டனத்தில் ; எனது நண்பர் டிரம்ப் மீதான இந்த தாக்குதல் பெரும் கவலை அளிக்கிறது. அரசியலிலும், ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
ராகுல் கண்டனம்
'அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது. இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்' என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.
கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை
துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயமடைந்த டொனால்ட் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும். அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்க்க வேண்டும் என கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்துள்ளார்.