மேலும் செய்திகள்
ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு
3 hour(s) ago | 5
பெலெம்: பிரேசிலில் நடந்து வரும் ஐநா காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் திடீரென தீ பற்றி ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஐநா காலநிலை உச்சிமாநாடு பிரேசிலின் பெலெமில் உள்ள சிஓபி30 அரங்கில் கடந்த 10ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்பட 190 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியா தரப்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், மாநாடு நடைபெறும் சிஓபி30 அரங்கில் நேற்றிரவு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், அங்கு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியக் குழுவினர் உள்பட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீவிபத்தில் 13 பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஐநா காலநிலை உச்சி மாநாடு ஏற்பாட்டு குழு கூறுகையில், 'திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் கிளம்பிய புகையை சுவாதித்த 13 பேருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன,' என்றனர்.
3 hour(s) ago | 5