உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இப்படியும் கொடூர கணவனா!: மனைவிக்கு போதை மருந்து கொடுத்து வாடகைக்கு ஆட்களை அமர்த்தி கற்பழிக்க வைத்த கயவன்

இப்படியும் கொடூர கணவனா!: மனைவிக்கு போதை மருந்து கொடுத்து வாடகைக்கு ஆட்களை அமர்த்தி கற்பழிக்க வைத்த கயவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பிரான்சில் 71 வயதான நபர் ஒருவர், தன் மனைவிக்கு போதை மருந்து கொடுத்து மயக்கநிலை அடைய செய்ததுடன், அவரை கற்பழிக்க ஆன்லைனில் ஆள் எடுத்து பலாத்காரமும் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 முதல் 74 வயதுள்ள சுமார் 72 பேர் அவரை கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t9b79fkm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பெண்கள் மீதான பலாத்கார வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், தந்தை போன்றோர்களால் பெண்கள் பல பாலியல் துயரங்களை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில், பிரான்சில் கட்டிய மனைவியை பலாத்காரம் செய்ய ஆன்லைன் மூலமாக ஆள் எடுத்து கணவனே கற்பழிக்க செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் 71 வயதான டொமினிகியூ என்பவர், 72 வயதான கிசெல் என்ற தனது மனைவிக்கு தூக்க மாத்திரை மற்றும் போதை மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைய செய்ததுடன், அவரை பலாத்காரம் செய்ய ஆன்லைனில் ஆள் எடுத்து கற்பழிக்க வழிவகை செய்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளாகவே இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்

ஷாப்பிங் சென்டர் ஒன்றில் குட்டை பாவாடை அணிந்து வந்த பெண் ஒருவருக்கு தெரியாமல் கேமராவில் படம்பிடித்த வழக்கில் டொமினிகியூவை போலீசார் கைது செய்தனர். அவரது மொபைல், கம்ப்யூட்டரை கைப்பற்றி பார்க்கையில்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது போனில் தனது மனைவியை பலர் பலாத்காரம் செய்யும் போட்டோக்கள் வைத்துள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: டொமினிகியூ - கிசெல் தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஆன்லைன் மூலமாக ஆள் எடுத்துள்ளார். இதற்காக கிசெலின் சாப்பாடு அல்லது மதுவில் தூக்க மாத்திரை மற்றும் போதை பொருளை கலந்துள்ளார் டொமினிகியூ.

26 - 74 வயதுள்ளவர்கள்

அவர் ஆழ்ந்த மயக்க நிலையை அடையும்போது, பலாத்காரம் செய்ய அவர் 'எடுத்த' வாடகை நபருக்கு அழைப்பு விடுக்கிறார். அவர் வந்து கிசெல்லை கற்பழித்துவிடுகிறார். கிசெல்லை இதுவரை 72 பேர் 92 முறை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் 26 முதல் 74 வயதுடையவர்கள். பலாத்காரம் செய்தவர்களில் 50 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வந்த கிசெல் உடன், மகள், 2 மகன்களும் வந்துள்ளனர்.

டிச.,20ல் தீர்ப்பு

உடல்நிலை பாதிப்புடன் காணப்பட்ட கிசெல்லுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல், 'பலாத்காரம் செய்யும்போது தான் போதையில் இருப்பதை கூட கிசெல் உணரவில்லை. அந்தளவிற்கு அதிகமான போதை மருந்து கலக்கப்பட்ட உணவு கொடுத்துள்ளனர். அதீத போதையால் என்ன நடந்தது என்றே கடந்த 10 ஆண்டுகளாக அவரால் உணர முடியவில்லை. அளவுக்கு அதிகமான போதை மருந்துகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டதோடு, ஞாபக மறதியையும் எதிர்கொள்கிறார். சிகிச்சை அளித்தும் பயனில்லை' என்றார். இந்த வழக்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Narayanan M
செப் 06, 2024 12:20

இந்த ஆளை பல ஆண்டுகள் அவன் செய்த கொடூரத்தை உணர செய்து பிறகு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்


Mano
செப் 04, 2024 19:40

இந்தியாவில் இருந்திருந்தால் இந்நேரம் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து மந்திரியாக ஆகி இருப்பான்.


V.Rajamohan
செப் 04, 2024 17:21

எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் உடைய கலாச்சார சீரழிவு கொண்ட மேலை நாட்டில் நடந்த இந்த சம்பவம்.ஆச்சரியம் அல்ல.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 16:58

எல்லாத்தையும் மன்னிச்சுருவாரா கோவாலு ???? ...... கடந்த 10 ஆண்டுகளாக தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஆன்லைன் மூலமாக ஆள் எடுத்துள்ளார்.


நிக்கோல்தாம்சன்
செப் 04, 2024 16:50

பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடிய தமிழக முன்னாள்/இந்நாள் மந்திரி பற்றி யோசித்து பார்க்கிறேன் , டொமினிக் மாதிரி ஒருத்தன் இன்னமும் இருக்கானே


சமூக நல விரும்பி
செப் 04, 2024 15:52

இந்த ஆளை பல ஆண்டுகள் அவன் செய்த கொடூரத்தை உணர செய்து பிறகு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்


Raghavan
செப் 04, 2024 15:33

வெறும் மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு. ஆஹா என்னே ஒரு சட்டம். அதே இங்கே நடந்திருந்தால் வழக்கு மூடிந்து தீர்ப்பு வருவதற்க்குள் அவளவுபெறும் எமலோகம் சென்று இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை