உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆபத்தா ?

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆபத்தா ?

லண்டன் :'கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, மிக அரிதாக பக்க விளைவு ஏற்படும்' என, தடுப்பூசியை தயாரித்த, 'ஆஸ்ட்ரா ஜெனேகா' நிறுவனம், பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கொரோனா பரவலின்போது, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. 'சீரம் இந்தியா' நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதே பெயரில் தடுப்பூசி தயாரித்தது.

51 வழக்குகள்

குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம், நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வகையில், 51 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. மொத்தமாக, தடுப்பூசி நிறுவனம் 1,047 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மனுதாரர்கள் கோரிஉள்ளனர். கொரோனா நெருக்கடிக்கு பின் இளைஞர்களிடம் மாரடைப்பு, பக்கவாதம், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. பக்க விளைவுகள் குறித்து இதுவரை வாய் திறக்காத ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், தாங்கள் தயாரித்த தடுப்பூசி மருந்தால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு அரிதாக சிலருக்கு ஏற்படலாம் என லண்டன் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், அந்த நிறுவனம் கூறியுள்ளது.டி.டி.எஸ்., எனப்படும் 'த்ரோம்போசிஸ் மற்றும் த்ரோம்போசைடோபினியா சிண்ட்ரோம்' என்ற அந்த நோய் தாக்கினால், மூளை அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ரத்தம் உறைந்து கட்டியாகிவிடும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறையலாம்.

அறிகுறி

தீராத தலைவலி, அடிக்கடி வயிற்று வலி, கால்கள் வீங்குவது, மூச்சு விடுவதில் சிரமம், நரம்பியல் பிரச்னை போன்றவை இதற்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது. இந்த நோயை சுலபமாக கண்டுபிடிக்க முடியாது. மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.'தி டெய்லி டெலிகிராப்' உள்ளிட்ட பத்திரிகைகள் விரிவாக இந்த தகவலை வெளியிட்டதை தொடர்ந்து, கோவிஷீல்டு போட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சில மாதங்களுக்குள் பக்க விளைவுகள் ஏற்படலாமே தவிர, ஆண்டுகள் கடந்த பின் உண்டாகும் நோய்களை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்த முடியாது என, சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அச்சம் வேண்டாம்

கொரோனா தடுப்பூசியில் பக்க விளைவுகள் என்பது, தடுப்பூசி போட்ட ஓரிரு மாதங்களில் தென்பட்டிருக்கும். ரத்தம் உறைதல், ரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். இந்த வகை பாதிப்பும் அனைவருக்கும் ஏற்பட்டு இருக்காது; ஒரு சிலருக்கு ஏற்பட்டு இருக்கும். தடுப்பூசி போட்டு, ஓரிரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எவ்வித பக்க விளைவும் தற்போது ஏற்படாது. எனவே, கோவிஷீல்டு போட்டு கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம். - சவுமியா சுவாமிநாதன்உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி

சீன விஞ்ஞானி போராட்டம்

கொரோனா வைரஸ் குறித்த மரபணு மாதிரியை முதலில் வெளியிட்டவர், சீனாவை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணர் ஜாங்க் யாங்க்ஜென். சமீபத்தில் இவருடைய ஆய்வகத்தை, சீன அரசு மூடி சீல் வைத்தது. இதற்கான காரணம் தெரியவில்லை. அரசின் நடவடிக்கையை கண்டித்து, ஆய்வகம் முன்பு அவர் தர்ணா செய்கிறார். கொரோனா வைரஸ் தொடர்பாக துவக்கத்தில் இருந்தே ரகசியம் காத்து வருகிறது சீனா. விஞ்ஞானிகளையும் கண்காணித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

கடல் நண்டு
மே 01, 2024 20:43

பக்க விளைவுகள் இல்லாதது எது ??? வீண் புரளிகளுக்கு இடம் கொடுக்காமல், நிபுணர்களின் ஆலோசனை படி அமைதியாக வாழ்வோமே


vijai seshan
மே 03, 2024 15:03

எங்க வாழ்றது நான் டெய்லி செத்துகிட்டு


Srinivasan Krishnamoorthi
மே 01, 2024 18:08

பக்க விளைவுகள் காலப்போக்கில் சரியாகும்


vijai seshan
மே 03, 2024 15:04

ஆமா இவரு கண்டுபிடிச்சிட்டாரு


Saai Sundharamurthy AVK
மே 01, 2024 17:41

இந்தியாவில் நடந்து வரும் தேர்தல் நேரத்தில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் தங்களின் கீழ்த்தரமான வேலைகளை காட்டி வருகின்றனர்.


Narayanan Muthu
மே 01, 2024 19:55

உண்மை உரைக்குதோ தோல்வி பயத்தின் உளறல்கள்


GoK
மே 01, 2024 17:09

இந்தியாவிலும் சிலர் தடுப்பு ஊசிக்கு பின் திடீர் மரணம் அடைந்தனர் ஆனால் அப்போதிருந்த சூழ்நலையில் மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தியதால் இதை முழுவதுமாக ஆராய்ச்சி செய்யவில்லை எனத் தெரிகிறதுஆனால் அவசியம் செய்ய வேணடும்


Kumar
மே 01, 2024 10:53

ஒரு வருடம் கழித்து அந்த மருந்தின் தாக்கம் முற்றிலும் மறைந்து விடும்...வீண் பயம் வேண்டாம்...


ديفيد رافائيل
மே 01, 2024 11:45

நான் corona தடுப்பூசி போடவே இல்லை எனக்கு கவலை இல்லை


vijaiRakshna
மே 01, 2024 17:52

என்ன தெரியும்


Kasimani Baskaran
மே 01, 2024 10:43

எல்லா விதமான தடுப்பூசிகளும் லட்சத்தில் ஒருவருக்கு பக்க விளைவுகளை கொடுக்கும் ஆனால் சரியான ஓய்வு, போதிய உடற்பயிற்சி போன்றவை தொடர்ந்தால் எந்தப்பிரச்சினையும் வராது தடுப்பூசி போடாமல் கோவிடால் பாதிக்கப்பட்டால் பல உறுப்புகளுக்கு நாசமாகி விடும் குறிப்பாக சுவாச உறுப்புகள் அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் நாசமாகிவிடும் ஆகவே கோவிட் தடுப்பூசி ஒரு வரப்பிரசாதமேயல்லாமல் கேடு அல்ல


vijai
மே 01, 2024 17:53

கேரண்டி


GMM
மே 01, 2024 09:52

பெரும்பாலும் அலோபதி மருந்து பக்க விளைவுகளை உண்டு பண்ணும்? தடுப்பூசிக்கு விதிவிலக்கு இல்லை? நம் சிறந்த உணவு கட்டுப்பாடு தான் இதன் வீரியத்தை குறைக்கும் ஊசி, மருந்து சாப்பிடும் காலங்களில் இது மிக அவசியம் மாமிச உணவு மூன்று வேளை, மது அருந்துவது இரு வேளை என்று இருந்தால், எதிர்ப்பு சக்தி குறையும்? பழங்கள், சைவ உணவு வகைகளை உண்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சர்வதேச வியாபாரம் போட்டி வழக்கு


vbs manian
மே 01, 2024 08:50

நமது உச்ச நீதி மன்றம் இப்போது என்ன செய்யும்


Dharmavaan
மே 01, 2024 15:04

உச்சநீதி ஆயுர்வேத சித்த மருந்துகள் பற்றித்தான் கவனிக்கும் கண்டிக்கும் ஆங்கில மரூந்துக்கு வக்காலத்து வாங்கும்


மணியன்
மே 01, 2024 08:20

தேர்தல் சமயத்தில் புரளியை கிளப்பி மக்களை பாஜக விற்கு எதிராக திருப்பும் மேற்கத்திய நாடுகளின் சதி. இந்தியாவின் வளர்ச்சியை அவர்கள் எதிர்காலத்திற்கு ஆபத்து என்கிற அச்சத்தின் வெளிப்பாடு.


அப்புசாமி
மே 01, 2024 07:59

அச்சம் வாணாம். பீதி வாணாம்.


மேலும் செய்திகள்