உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முதல் நாள் முதல் கையெழுத்து; மாற்றம்; முன்னேற்றம்; கமலா ஹாரிஸ்! எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே!

முதல் நாள் முதல் கையெழுத்து; மாற்றம்; முன்னேற்றம்; கமலா ஹாரிஸ்! எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; 'நான் அதிபரானால் நடுத்தர மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதே முக்கிய இலக்காக இருக்கும்' என்று, கமலா ஹாரிஸ் கூறி உள்ளார்.

அதிபர் தேர்தல்

உலக நாடுகள் உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளாராக மாஜி அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். இருதரப்பினரும் தங்கள் வலுவான பிரசாரங்களை முன் வைத்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கருத்துக்கணிப்பு

அதிபராக வெற்றி பெறும் வாய்ப்பு கமலா ஹாரிசுக்கு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மக்கள் ஆதரவு அவருக்கு அதிகம் உள்ளதாகவும் சர்வதேச அளவில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க குடியேற்றம் பற்றி தமது நிலைப்பாடில் அவர் மாறுபட்ட கருத்துகளை பிரசாரத்தில் கூறி வந்ததாக தெரிகிறது.

பேட்டி

இந்நிலையில் அதிபராக வென்றால் தாம் உடனடியாக செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பதை பற்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கமலா ஹாரிஸ் கூறி உள்ளதாவது; அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம். அதில் தான் அதிக கவனம் செலுத்துவேன். நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எனது முதல் இலக்கு.

ஒப்பந்தம்

காலநிலை மாறுபாடு என்பது அதி முக்கிய மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பசுமை புதிய ஒப்பந்தம் மிகவும் நெருக்கடியான மற்றும் முக்கியமான ஒன்று. எல்லைகளை பாதுகாக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் ஏற்கனவே கூறிய விஷயங்களில் இருந்து எந்த மாற்றமும் இல்லை.

பொருளாதாரம்

பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டால் தீர்வு காணலாம் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவது, அதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. பொருளாதாரத்தை மீட்டு விட்டாலும், அதை மேலும் சிறப்பாக்க நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது.

முக்கிய முடிவு

இஸ்ரேல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னமும் 68 நாட்கள் இருக்கின்றன. வெவ்வேறு விதமாக கோணங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கருத்துகளை ஏற்றுக் கொள்வது, பரிசீலிப்பது மிகவும் முக்கியம். பாலினம், நிறவேறுபாடு என எதிலும் பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினருக்கும் ஒரு சிறந்த அதிபராக பரிணமளிக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால் தான் நான் வேட்பாளராக நிற்கிறேன். இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார். 'கமலா ஹாரிஸ் தேர்தலுக்காக தன்னை கறுப்பினத்தவராக காட்டிக்கொள்கிறார்' என்ற டிரம்பின் குற்றச்சாட்டு பற்றி பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியை பொருட்படுத்தாத கமலா, 'இதெல்லாம் பல முறை சொல்லப்பட்ட, மிகவும் பழைய, தேய்ந்து போன புகார்; அடுத்த கேள்விக்கு வாங்க' என்றார். 'அவ்வளவு தானா' என்று மீண்டும் கேட்டபோது, 'அவ்வளவு தான் பதில்' என்று முடித்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kumar Kumzi
ஆக 30, 2024 15:05

இவர் இந்திய வம்சாவழியாக இருந்தாலும் இந்திய எதிர்ப்பு கொள்கை கொண்டவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை


Sridhar
ஆக 30, 2024 14:20

இந்திய வம்சாவெளியை சேர்ந்த அதுவும் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவுக்கு ஜனாதிபதியானால் மிகுந்த சந்தோசம்தான். ஆனால், மீடியாக்கள் கட்டமைக்கிற கருத்துக்கணிப்பை தாண்டி டிரம்ப் அமோக வெற்றி பெற்றுவிடுவார் என்று தோன்றுகிறது. மேலும், இந்த பெண்ணின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் நம்ம ஊருல இருக்குற மோசமான அரசியல்வாதிகளின் சாயலில் இருக்குறதுமாதிரி தெரியுது. அதுனால டிரம்ப் ஜெயிக்கறதுதான் சரியா இருக்கும்.


SUBRAMANIAN P
ஆக 30, 2024 13:47

மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றம்


Kumar Kumzi
ஆக 30, 2024 15:02

ஹாஹாஹா இருந்தாலும் ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் தா ஓட்டு போடுவோம் ஊப்பீஸ் சபதம்


கூமூட்டை
ஆக 30, 2024 13:39

இது தான் கூமூட்டை முன்னேற்றக் மாடல்


அப்புசாமி
ஆக 30, 2024 12:19

அவிங்க மூதாதையர் இங்கேருந்துதானே போயிருக்காங்க. அதுவும் திருவாரூர் பக்கத்திலேருந்துதான் போனாங்களாம். மண்வாசனை வீசுது பேச்சில்.


kulandai kannan
ஆக 30, 2024 12:15

இவர் செய்யப் போகிறேன் என்று சொல்வதில் ஒன்றையாவது கடந்த மூன்றரை ஆண்டுகளில் செய்யாதது ஏன்?


sureshpramanathan
ஆக 30, 2024 11:49

Hope Kamala Harris will not work against India interests India does not need anything from her excepting far treatment of Indians That's it


ஆரூர் ரங்
ஆக 30, 2024 11:21

அப்போ அமெரிக்க நடைபாதைகளில் வசிக்கும் கோடி ஏழைகளுக்கு எதுவும் செய்ய மாட்டார்.


Venkatesh Sagadevan
ஆக 30, 2024 10:52

மாற்றம் , முன்னேற்றம், அன்புமணி


Anand
ஆக 30, 2024 10:51

அட நம்ம விடியா மூஞ்சியை பாலோ செய்யுது, ஆனால் அமெரிக்கானுக்கும் டுமிழனுக்கும் வித்தியாசம் இருக்கே, அவன் நாட்டை கட்டி காப்பான், இவன் காட்டிக்கொடுப்பான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை