உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியர்களை வெறுக்கும் நியூயார்க் மேயர்; அதிபர் டிரம்பின் மகன் குற்றச்சாட்டு

இந்தியர்களை வெறுக்கும் நியூயார்க் மேயர்; அதிபர் டிரம்பின் மகன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்களை வெறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கிற்கு அண்மையில் நடந்த மேயர் தேர்தலில், 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்றார். தேர்தலின் போது, அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் ஜோஹ்ரான் மம்தானி கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்கள் மற்றும் யூதர்களை வெறுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; நியூயார்க் நகருடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு, உலகில் வேறு எந்த நகரமும் இல்லை. ஆனால், இந்தியர்கள், யூதர்களை வெறுக்கும், இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு கம்யூனிஸ்ட் நபர் இங்குள்ளார். பாதுகாப்பான மற்றும சுத்தமான தெருக்கள், நியாயமான வரிகள் போன்றவற்றில் இங்கு தேர்வு செய்யப்பட்ட மேயர் கவனம் செலுத்தினால், அரசின் தலையீடு இல்லாமல் நியூயார்க் நகரம் செழிப்படையும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சாமானியன்
நவ 19, 2025 12:09

எந்த முஸ்லீம் நாட்டிலும் ஜனநாயகமே இல்லை. இருக்க விட மாட்டார்கள். அடிமைகளாக இருக்க சம்மதம் ஆனால் அமெரிக்காவின் நட்பைப் பெறலாம். காழ்ப்புணர்ச்சிகள் நிறைந்த அரசியல் நாடு அமெரிக்கா.


Narasimhan
நவ 19, 2025 12:07

அவ்வளவுதான்


சூர்யா
நவ 19, 2025 11:43

உள்ளூரிலேயே இந்தியாவை, இந்தியர்களை எதிர்ப்பவர்கள் வெளி நாட்டில் ,அமெரிக்காவில் மட்டும் இந்தியர்களை ஆதரித்து விடுவார்களா என்ன? இதில் நியூ யார்க் நகர மேயர் மட்டும் விதி விலக்காகவா இருக்கப் போகிறார்?


naranam
நவ 19, 2025 11:29

என்னமோ டிரம்ப் கூட்டத்துக்கு மட்டும் இந்தியர்களை ரொம்ப பிடிக்கும் என்கிற மாதிரி பேசுகிறாரே இவர்?


Perumal Pillai
நவ 19, 2025 11:25

"அமெரிக்க முஸ்லிம் மேயர்". இவர் இந்தியர் இல்லை .


Field Marshal
நவ 19, 2025 11:48

அம்மா மீரா நாயர் ..இந்து பெண்மணி …


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை