உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடனான போர் குறித்த அமெரிக்க அறிக்கையை பாராட்டிய பாக்., பிரதமர்; தட்டிக்கழித்தது சீனா

இந்தியாவுடனான போர் குறித்த அமெரிக்க அறிக்கையை பாராட்டிய பாக்., பிரதமர்; தட்டிக்கழித்தது சீனா

பெய்ஜிங்: இந்தியாவுக்கு எதிரான போர் குறித்து அமெரிக்க அறிக்கையை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டிய நிலையில், அது தவறான தகவல் என்று சீனா நிராகரித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்பரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதல், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், அவர்களின் முகாம்களும் சூறையாடப்பட்டன. அதன்பிறகு, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில் போரை இந்தியா நிறுத்தியது. இந்த மோதலின்போது, சீன ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான போரின் போது பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி, ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார் இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெற்றியடைந்ததாக, அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மதிப்பாய்வு குழு சமர்பித்த அறிக்கையை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதாகவும் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டியதாகவும் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் போரின் போது சீன ஆயுதங்களின் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானின் முக்கிய நட்பு நாடான சீனா, இந்த அறிக்கையை தவறான தகவல் என்று நிராகரித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், 'நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த ஆணையம் எப்போதும் சீனாவுக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. அதன் அறிக்கையில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை' என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 21, 2025 09:59

இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெற்றியடைந்ததாக, அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மதிப்பாய்வு குழு சமர்பித்த அறிக்கையை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதாகவும் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டியதாக செய்தி. இது எப்படியாப்பட்ட உலகமகா பொய். தமிழக முதல்வர் கூட இந்த அளவுக்கு பொய் பேசமாட்டார். அவரையே மிஞ்சிவிட்டார்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை