உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2035க்குள் நிலவுக்கு செல்ல பாக்., ஆர்வம்: சீனாவிடம் உதவி கேட்கிறது

2035க்குள் நிலவுக்கு செல்ல பாக்., ஆர்வம்: சீனாவிடம் உதவி கேட்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் 2035ம் ஆண்டுக்குள் சீனாவின் ஆதரவுடன் நிலவில் விண்கலத்தை இறக்க திட்டமிட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தா னின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, 'சுபார்கோ'. க டந்த 1961ல் இந்த அமைப்பு துவங்கப்பட்டாலும் பயங்கரவாதம், அரசியல் குழப்பம், பொருளாதார பிரச்னை போன்றவற்றால் இத்துறை இதுவரை தானே ஒரு செயற்கைக்கோளை கூட ஏவியதில்லை. இதுவரை, எட்டு செயற்கைக்கோள்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. ஆனால், சீனாவின் முதுகிலேயே சவாரி செய்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகளுக்கான அமைச்சர் அஹ்சன் இக்பால், கடந்த 4ம் தேதி சீனா சென்று, அந்நாட்டு அணுசக்தி மற்றும் விண்வெளி முகமையின் தலைவர் ஷான் ஜொங்டேவை சந்தித்தார். அவரிடம் அணுசக்தி மற்றும் விண்வெளி துறையில் ஆழமான ஒத்துழைப்பு தேவை என பாகிஸ்தான் அமைச்சர் வலியுறுத்தினார். கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது: பாகிஸ்தான் 2035க்குள் சீனாவின் ஆதரவுடன் நிலவில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, 2028ல் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சீனாவின் சேஞ்ச் - 8 திட்டத்தில் 35 கிலோ எடையுள்ள 'ரோவர்' எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் சாதனம் ஒன்றை பாகிஸ்தான் வழங்கும். இந்த ரோவர் நிலவின் தென் துருவத்தில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும். அடுத்த ஆண்டில், முதல் முறையாக விண்வெளிக்கு முதல் பாகிஸ்தான் வீரர் பயணம் செய்வார் என நம்புகிறோம். அவர் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். விண்வெளிக்கு அதிக செயற்கைக்கோள் அனுப்பிய நாடுகள் பட்டியலில், 8,530 செயற்கைக்கோள்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 136 செயற்கைக்கோள்களுடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Natarajan Ramanathan
ஆக 09, 2025 09:13

துலுக்கன் தங்கள் நாட்டு கொடியில் இருக்கும் நிலா என்று நினைத்துவிட்டான் போல.


veeramani
ஆக 08, 2025 09:21

இந்திய பத்திரிக்கைகள் மீடியாக்கள் ஒரு வேண்டுகோள்.. நமது நாட்டில் தீவிரவாத செயல்கள் புரிந்து இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் நமது ஜென்ம எதிரி பாகிஸ்தானின் செய்திகளை பிரசுரிக்காதீர்கள்.


vee srikanth
ஆக 07, 2025 15:47

உய்குர் மக்களை பற்றி கவலை இல்லை


SUBRAMANIAN P
ஆக 07, 2025 13:54

மொதல்ல மனுஷனா இருங்க. அப்புறம் இதைப்பத்தியெல்லாம் பேசுங்க.


Ramesh Sargam
ஆக 07, 2025 13:00

பூமியில் பயங்கரவாதிகளை உருவாக்கி வளர்த்தது போதாது என்று நிலவில் கூடவா...?


jaya
ஆக 07, 2025 12:42

சீனா கில்லாடி , நிலவுக்கு கூட்டிப்போகும் செலவை கடனாக கொடுக்கும் , திருப்பி செலுத்தாவிட்டால் நாட்டின் ஒரு பகுதியை சீனாவுக்கு எழுதி வைக்கச்சொல்லி கேட்பார்கள்.


Shivakumar
ஆக 07, 2025 12:16

முதலில் பக்கத்தில் இருக்கும் பலுசிஸ்தான் போங்க பயமில்லாம... பிறகு நிலவுக்கு செல்லலாம்.


Tiruchanur
ஆக 07, 2025 12:13

அவனுங்க கொடியிலே இருப்பது போல ...


xyzabc
ஆக 07, 2025 11:46

நிலவிலும் தீவிரவாதிகளா ? ஐயோ


V RAMASWAMY
ஆக 07, 2025 11:18

நிலவில் பிறை நிலா நக்ஷத்திர கொடியை நாட்டணும்னும் ஆர்வம்? ஆசை தோசை அப்பளம் வடை. எங்க கொடியை நாங்க அப்பவே நட்டாச்சு, யாருடைய உதவியும் இல்லாமலே. நாங்க பாசிட்டிவ் உங்களமாதிரி நெகடிவ் இல்லே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை