உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நடுவானில் விமானத்தின் கதவு கழன்று விழுந்தது: பயணிகள் அதிர்ச்சி

நடுவானில் விமானத்தின் கதவு கழன்று விழுந்தது: பயணிகள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடுவானில் பயணித்த விமானம் ஒன்றின் கதவு திடீரென கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.அமெரிக்காவின் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் இருந்து கலிபோர்னியாவின் ஆன்டரியோ நகரை நோக்கி 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் விமானம் ஒன்று கிளம்பியது. விமானம், 16,325 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென அதன் கதவுகள் கழன்று கீழே விழுந்தது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர், இதனை வீடியோவாக பதிவு செய்தனர். உடனடியாக, விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜன 07, 2024 01:03

இன்டிகோ, ஏர் இந்தியா ன்னு 300 க்கும் அதிகமான விமானங்களை வாங்குறோம் இதே போயிங் 737 max ரக் விமானங்களைத் தான். சென்ற வாரம் தான் போயிங் விமானத்தில் வால் பகுதியில் நட்டு போல்ட் ஒன்று முடுக்கப்படாமல் உற்பத்தி ஆகிறது என்று அறியப்பட்டது.


Ramesh Sargam
ஜன 07, 2024 00:56

விமானத்தில் பயணிக்கும் வொவொரு நிமிடமும் திக் திக் தான். அட, இந்த காலத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் வீதிகளில் நடக்கும்போதும் நெஞ்சு திக் திக் என்றுதான் அடித்துக்கொள்கிறது. அடுத்த நொடி என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது.


M.S.Jayagopal
ஜன 06, 2024 18:50

விமான பயணம் என்பது பல நேரங்களில் கரணம் தப்பினால் மரணம் போன்றதுதான்.இதில் பரிகாசத்திற்கு இடமில்லை.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 06, 2024 17:36

அமெரிக்காவில் 20,000 விமான நிலையங்கள் உள்ளன. 400 விமான சேவை நிறுவனங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 2 லட்சம் (200,000) விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுபோன்ற சிறு விபத்துக்கள் அங்கு சர்வ சாதாரணம்.


Anantharaman Srinivasan
ஜன 06, 2024 14:08

நம்ம ஊர்ல பாத்ரூம் தாப்பாள் தான் சரியா போடவராது. அமெரிக்காவிலே விமான கதவே அந்தகதி.


சிவ.இளங்கோவன் .
ஜன 06, 2024 13:48

அண்ணாமலை அமெரிக்க பயணம் செல்லவில்லை ..


enkeyem
ஜன 06, 2024 14:58

அண்ணாமலை சில கழக கட்சி தூக்கத்தை கெடுத்து ஆட்டிப்படைத்து வருகிறார்.


Barakat Ali
ஜன 06, 2024 15:17

விபத்துக்கு வாய்ப்பு ...... இதைப்பற்றிய செய்தி வந்தாலே நினைக்கும் அளவுக்கு .....


அப்புசாமி
ஜன 06, 2024 12:04

நம்மாளு யாராவது வழில இறக்கி விடுங்க வீட்டு சாவியை மறந்துட்டேன், கேஸ் அடுப்பை அணைச்சேனான்னு தெரியலைன்னு கேட்டிருப்பார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை