உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 30 ஆண்டுக்குப் பின் அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் உத்தரவு

30 ஆண்டுக்குப் பின் அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : அணு ஆயுத சோதனையை துவங்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xoqi4uqi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை சோதித்து வருவதால், தங்கள் அணு ஆயுதங்களை சோதிக்க துவங்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனா தன் அணு ஆயுத பலத்தை விரைவாக அதிகரித்து வருவதாக தெரிவித்த டிரம்ப், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக வளர்ந்துவிடும் என எச்சரித்தார்.டிரம்பின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் மிகுந்த கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவு, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே அணு ஆயுதப் போட்டியை துாண்டி விடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 1992ம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 30, 2025 23:51

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. மற்றும், சீனா, வடகொரியா போன்ற நாடுகளும் தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்கிறது. இதையெல்லாம் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை துவங்க உத்தரவு பிறப்பித்து உள்ளார். சில வாரங்களுக்கு முன்புதான் நான் ஏழு நாட்டு போரை நிறுத்தி உள்ளேன். எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு என்று ஒரு ஆசையில் இருந்தார். அது கிடைக்கவில்லை. அந்த கோபத்தில் கூட இந்த உத்தரவு வந்திருக்கும்.


Anbuselvan
அக் 30, 2025 23:20

வெடிக்குமா புஸ்ஸாகுமா தெரியலையே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை