உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்

பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்

சோபியா: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில், பிரதமர் ரோசென் ஜெல்யாஸ்கோவ் தலைமையிலான சிறுபான்மை கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அரசு அறிவித்த பட்ஜெட்டில் வரி உயர்வு, சமூக பாதுகாப்பு பங்களிப்பு உயர்வு, செலவின அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தலை நகர் சோபியா உட்பட பல்வேறு நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து பட்ஜெட்டை திரும்பப் பெறுவதாக பல்கேரியா அரசு அறிவித்தது. இந்நிலையில், நாட்டில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆட்சியில் செல்வந்தர்களின் தலையீடு இருப்பதாகக் கூறி மீண்டும் போராட்டம் வெடித்தது. தலைநகர் சோபியாவில் பார்லிமென்ட், அரசு மாளிகை, அதிபர் மாளிகை ஆகியவை அமைந்துள்ள மைய சதுக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் திரண்டனர். பல்கேரியா அரசு, வரும் ஜனவரி முதல் யூரோவை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி