உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் துப்பாக்கி சூடு பிஷ்னோய் கும்பல் அடாவடி

கனடாவில் துப்பாக்கி சூடு பிஷ்னோய் கும்பல் அடாவடி

டொரண்டோ: கனடாவில் உள்ள பஞ்சாபி பாடகர் சானி நாட்டனின் வீட்டின் மீது, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், சமீப காலமாகவே சீக்கியர் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில், பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தில், நான்கு மாதத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சீக்கிய தொழிலதிபர் ஒருவர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பஞ்சாபி பாடகர் சானி நாட்டனின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தொழிலதிபர் கொலை சம்பவங்களுக்கு, இந்தியாவில் பிறந்த, கனடா உட்பட பல நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. அந்தக் கும்பலின் முக்கிய உறுப்பினரான கோல்டி தில்லான், சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு இதை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை, கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. தற்போது தொடர் வன்முறையில் ஈடுபடுவதால், இந்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க, கனடா அரசு ஆயத்தமாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை