உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இழுபறி மாகாணங்கள் அனைத்திலும் டிரம்ப் வெற்றி

இழுபறி மாகாணங்கள் அனைத்திலும் டிரம்ப் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், இழுபறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஏழு மாகாணங்களிலும், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வென்றுள்ளார். இதையடுத்து, அவருக்கான 'எலக்டோரல் காலேஜ்' ஆதரவு அதிகரித்துள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில், அரிசோனா உட்பட ஏழு முக்கிய மாகாணங்கள், 'ஸ்விங் ஸ்டேட்' எனப்படும் அலைபாயும் மாகாணங்களாகும். இங்கு யாருக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை கணிக்க முடியாது.இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் இந்த ஏழு மாகாணங்களில், நவேடா, விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய ஆறு மாகாணங்களில் டிரம்புக்கு அதிக ஆதரவு கிடைத்தது. அனைத்து மாகாணங்களிலும் ஓட்டு எண்ணிக்கை நேற்று முடிந்த நிலையில், அரிசோனாவிலும் டிரம்ப் வென்றார். இங்கு, எலக்டோரல் காலேஜ் எனப்படும் அதிபர் தேர்தல் முடிவை உறுதி செய்யும் மாகாணங்களின் பிரதிநிதிகள், 11 பேர் உள்ளனர். இந்த ஓட்டுகளும் கிடைத்ததைத் தொடர்ந்து, டிரம்புக்கான எலக்டோரல் காலேஜ் ஓட்டு எண்ணிக்கை, 312 ஆக உயர்ந்தது. கமலா ஹாரிசுக்கு, 226 ஓட்டுகள் கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
நவ 11, 2024 22:40

ட்ரம்புக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு பெரிய்ய்ய்ய ஏமாற்றம் காத்திருக்கு. Majority is always wrong.


தமிழ்வேள்
நவ 11, 2024 11:27

வாக்களிக்க அடையாள அட்டை தேவையில்லை என்ற சட்டம் உள்ள அனைத்து மாகாணங்களிலும் கமலா ஹாரிஸ் வென்றிருக்கிறார் ...அகதிகள் , போனவன் வந்தவன் எல்லாம் திருட்டு ஒட்டு போட்டார்கள்போல -திராவிடம் போல ....


Minimole P C
நவ 11, 2024 08:03

Trump is more nationalist than Biden and his party. You can see American interests first in all his decisions. He never let down US and its citizens.


N Sasikumar Yadhav
நவ 11, 2024 07:17

ட்ரம்ப் ஆட்சியில்தான் உலகம் அமைதியாக இருந்தது


Kasimani Baskaran
நவ 11, 2024 04:48

சென்றமுறை சீனாவில் இருந்து 20 லட்சம் வாக்குச்சீட்டு நிரம்பிய பெட்டிகள் வந்ததாக ஒரு வதந்தி உலவுகிறது.


J.V. Iyer
நவ 11, 2024 04:27

இனிமேல் டீப் ஸ்டேட் எழுந்திருக்கக்கூடாது. ஜனநாயக கட்சியில் உள்ள எல்லோரும் அயோக்கியர்கள், நம்ம ஊர் இந்தி கூட்டணிபோல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை