உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிக நேரம் ஸ்பேஸ் வாக் சாதனை படைத்தார் சுனிதா வில்லியம்ஸ்; குவிகிறது பாராட்டு!

அதிக நேரம் ஸ்பேஸ் வாக் சாதனை படைத்தார் சுனிதா வில்லியம்ஸ்; குவிகிறது பாராட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, அதிக நேரம் 'ஸ்பேஸ் வாக்' செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். அவர்கள் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் 'ஸ்பேஸ் வாக்' செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார். மிகுந்த பாதுகாப்புடன் நடந்த 'ஸ்பேஸ்வாக்' 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன. 9வது முறையாக ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களை கழித்துள்ளார். சுனிதாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subramanian
ஜன 31, 2025 18:31

வாழ்த்துக்கள்


Senthoora
ஜன 31, 2025 17:08

என்னதான் சாதனை படைத்தாலும், அவர் பூமித்தாயிடம் உயிருடன் திரும்பணும், குடும்பத்தாருடன் சந்தோசத்தை அனுபவிக்கனும். இது எங்கள் பிராத்தனை.


Karthik
ஜன 31, 2025 16:23

முதலில் நான் " அதிகநேர லாக் னு" தவறுதலா படிச்சிட்டேங்க.. ஹீ ஹீ ஹீ


Petchi Muthu
ஜன 31, 2025 13:53

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை