உள்ளூர் செய்திகள்

கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் பிரதோஷ வழிபாடு

புதுடில்லி : பிரதோஷத்தை முன்னிட்டு, கல்பாதி, சாத்தாபுரம் ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், கலச பூஜை, ஸ்ரீ ருத்ராபிஷேகம், கலச அபிஷேகம், மற்றும் ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைபெற்றன.மூலவர் ஸ்ரீ பிரசன்ன கணபதிக்கு வண்ணமயமான மற்றும் மணம் கொண்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பிரதோஷம்இந்து சமயத்தில் சிவபெருமானை வழிபடும் ஒரு சிறப்பு வாய்ந்த காலமாகும், இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் வரும். இந்த நாளில், குறிப்பாக மாலை நேரங்களில், நந்திகேசுவரருக்கு அபிஷேகம் செய்து சிவனை வணங்குவதன் மூலம் தடைகள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. --- புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !