டில்லி ரோகிணி ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஸ்ரீமத் தேவி பாகவத மகா நவாஹ யக்ஞம்
புதுடில்லி : வட மேற்கு டில்லி பகுதியில் உள்ள ரோகிணியில், 7வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில்முதல் ஸ்ரீமத் தேவி பாகவத நவாஹ யக்ஞம் ( செப்- 19 முதல்- 28 வரை) , காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. புராணஸ்ரீ கொளத்தூர் புருஷோத்தமன் நாயர் யக்ஞாச்சாரியார் இதில் பங்கேற்கிறார்.இதன் தொடர்ச்சியாக, செப்-19, (வெள்ளிக்கிழமை) இரவு 7.00 மணிக்கு ரோகிணி ஸ்ரீ ஐயப்பன் கோயிலின் தலைமைப் பரிபாலகர் ஸ்ரீ பாபு பணிக்கர் தீபம் ஏற்றி நவாஹத்தை துவக்கி வைக்கிறார்.ஐவகை யக்ஞங்கள் எது ? இல்லறத்தில் ஈடுபடுபவர் கடைபிடிக்க வேண்டிய ஐந்து புனிதக் கடமைகளைக் குறிக்கிறது மகா நவாக யக்ஞம். இந்த ஐவகை யக்ஞங்கள்: தேவ யக்ஞம், பிரம்ம/ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், மற்றும் பூத யக்ஞம் ஆகும். இந்த கடமைகளைச் செய்வதன் மூலம் உலகில் அமைதியாகவும், மற்றவர்களுடன் இணக்கமாகவும் வாழலாம் என்பது இந்து மதத்தின் கருத்து. இந்த மகா நவாக யக்ஞம் ஒரு மகத்தான வெற்றியாக அமைய, பக்தர்களின் தொடர்ச்சியான பங்களிப்பும் ஒத்துழைப்பும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு நிர்வாக குழுவினர் கூறியுள்ளனர். மேலும் விபரங்களுக்கு : கைபேசி எண் : 9654243243, 9716515459, 9910633660--- புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.