நொய்டா முருகன் கோவிலில் ஸ்ரீ ஐயப்பன் பஜனை
நொய்டா செக்டார் 62ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் போல், இந்த ஆண்டு 'ஐயப்ப சீசன்' போதும் 2 நாள் பஜனை நடைபெற்றது. நவம்பர் 16, சனிக்கிழமை அன்று, வேதிக் பிரச்சாரர் சன்ஸ்தான் (VPS), மற்றும் BHEL ஐயப்ப பூஜை சமிதியுடன் இணைந்து, ஸ்ரீ மஞ்சப்ரா மோகன், குழுவினர் வழங்கிய ஐயப்பன் பஜனைகளுடன் சாஸ்தாப்ரீதியை நடத்தியது. தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முகுந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து கலைஞர்களையும் கவுரவித்தார். பாஜக தில்லி (தமிழ் பிரிவு) தலைவர் முத்துசாமியும் பூஜைகளில் பங்கேற்றார். வி.பி.எஸ்., சார்பில், தலைவர் ரவி பி.சர்மா, சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். இரண்டாம் நாள் பஜனை நிகழ்ச்சியை நவம்பர் 24ல் ஹம்சத்வானி பஜன் மண்டலி நடத்தியது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீதர் ஐயர், சங்கரநாராயணன், வெங்கடரமணன் மற்றும் குடும்பத்தினர், வேதிக் பிரச்சார் சன்ஸ்தானத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தனர். மிருத்யுஞ்சய் குமார் சிங் (யூனிட் ஹெட், அமர் உஜால, தில்லி மற்றும் என்சிஆர்) தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, பஜனை குழுவை கவுரவித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் ரவி பி சர்மா தலைமை விருந்தினரை கவுரவித்தார். ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரர்களை வி.பி.எஸ். சார்பில் ஸ்ரீ ராமசேஷன் கவுரவித்தார். மேலும், இச்சமயத்தில் ஆலய நிர்வாகத்தின் வெளியிடப்பட்ட பதினாறு பக்க கோப்புறையை ஆர் முகுந்தன் வெளியிட்டார். இரண்டு நாட்களும், காலை கணபதி ஹோமத்துடன், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ ஐயப்பன் ஸஹஸ்ரநாம அர்ச்சனை யுடன் காலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து மகா தீபாராதனையும், பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதமும் வழங்கப்பட்டது. நொய்டாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தில்லி, இந்திராபுரம், காஜியாபாத் மற்றும் வைஷாலி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர கோயில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார். அனைத்து பூஜைகளும் கோயில் வாத்தியார் மணிகண்டன் சர்மா செய்தார். -_ நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்