உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  கேழ்வரகு - சோளம் காம்பினேஷன் குழந்தைகள் விரும்பும் நுாடுல்ஸ்

 கேழ்வரகு - சோளம் காம்பினேஷன் குழந்தைகள் விரும்பும் நுாடுல்ஸ்

இன்றைய குழந்தைகள், தாங்கள் விரும்பும் உணவை தான் சாப்பிட விரும்புகின்றனர். அதிலும் நுாடுல்ஸ் என்றால் கேட்க வேண்டியதே இல்லை. பெரும்பாலான பெற்றோர், கடைகளில் இருந்து குழந்தைகளுக்கு சிக்கன் நுாடுல்ஸ் அதிகம் வாங்கிக் கொடுக்கின்றனர். நுாடுல்ஸ் மைதா மாவில் தயார் செய்யப்படுவது என்பதால், அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. வீட்டிலேயே கேழ்வரகு - சோளம் காம்பினேஷனில் குழந்தைகள் விரும்பும் நுாடுல்ஸ் செய்து கொடுக்கலாமே. தேவையான பொருட்கள்  ஒரு கப் கேழ்வரகு மாவு  ஒரு கப் சோள மாவு  ஒரு குடை மிளகாய்  ஒரு கேரட்  ஒரு பெரிய வெங்காயம்  முட்டைகோஸ் தேவையான அளவு  அரை டீஸ்பூன் மிளகாய் பவுடர்  ஒரு பச்சை மிளகாய்  நான்கு பல் பூண்டு  ஒரு டீஸ்பூன் சர்க்கரை  இரண்டு தக்காளி  உப்பு, எண்ணெய், கொத்தமல்லி இலை தேவையான அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் சோள மாவு, கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். சிறிய முறுக்கு அச்சில் சேர்த்து இட்லி பாத் திரத்தில் பிழிந்து வேகவைத்து எடுத்தால் நுாடுல்ஸ் தயாராகி விடும். அடுப்பை ஆன் செய்து வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின், நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ், கேரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்த தக்காளி, மிளகாய் பவுடர், கரம் மசாலா சேர்த்து வதக்கிய பின், ஒரு டீஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து உள்ள நுாடுல்ஸ் உடன் சேர்க்கவும். நன்றாக கிளறி கொத்தமல்லி இலையை துாவி இறக்கினால் சுவையான கேழ்வரகு, சோளம் நுாடுல்ஸ் தயார். கேழ்வரகு, சோளம் இரண்டுமே சத்தான தானியங்கள் என்பதால், இதில் செய்யும் நுாடுல்ஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் கொடுத் துவிடலாம். காலையில் பிரேக் பாஸ்டாக கூட கொடுக்கலாம். குழந்தைகள் சமத்தாக சாப்பிட்டு விட்டு சத்தம் போடாமல் செல்வர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை