உள்ளூர் செய்திகள்

ஒரு பள்ளி பெருமை கோரிக்கை

'கல்வியை கெட்டியா பிடிச்சுக்கிட்டா வாழ்க்கையில தோல்வி கிடையாது!' விழுப்புரம் - திருக்கோவிலுார், ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தினசரி காலை வழிபாட்டு கூட்டத்தில் ஒலிக் கும் தலைமை ஆசிரியரின் அறிவுரை இது! 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பள்ளியில், தற்போது 190 மாணவர்கள் படிக்கின்றனர்! பள்ளி: மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிப்பதற்காக பள்ளி கல்வித்துறை நிர்ணயித்த கற்றல் அடைவு இலக்கை, திருக் கோவிலுார் வட்டத்தில் முதலில் அடைந்தது இப்பள்ளி! 'மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை' தரும் தேசிய திறனறி தேர்வில் இதுவரை இப்பள்ளியின் 12 மாணவர்கள் சாதித்திருக்கின்றனர்! பெருமை: 'நான்காம் வகுப்பு வரை நான் தனியார் பள்ளி மாணவி. இங்கு வந்ததும் பரதநாட்டியத்தில் மாவட்ட அளவில் சாதித்திருக்கிறேன்; என் ஓவியத் திறமையையும் அடையாளம் கண்டிருக்கி றேன். அரசு சார்பில் மாதம் இருமுறை வெளியாகும் 'தேன்சிட்டு' சிறார் இதழில் என் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன!' - தீபிகா, 8ம் வகுப்பு. கோரிக்கை: கிராமப்புற பள்ளி என்றா லும், 'ஸ்மார்ட் போர்டு, கணினி ஆய்வகம்' உள்ளிட்ட வசதிகள் கொண்டது எங்கள் பள்ளி. தற்போது, நவீனமுறையில் கணிதம் கற்பிக்கும் ஆய்வகம் அமைக்கும் முயற்சியில் இருக்கிறோம்; இதற்கு தேவைப்படும் 10 கணினி களுக்காக காத்திருக்கிறோம்!' - தலைமை ஆசிரியர் செல்வகுமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !